வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Merry Christmas Movie Review- ஒரே இரவில் நடக்கும் ரோலர் கோஸ்டர் மர்மங்கள்.. விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் எப்படி இருக்கு.? விமர்சனம்

Merry Christmas Movie Review: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் கூட்டணியில் உருவாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் இன்று வெளியாகி உள்ளது. ஒரே இரவில் நடக்கும் திகில் சம்பவங்களை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கும் இயக்குனர் அதில் ஜெயித்தாரா? என்பதை இங்கு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

மும்பை பம்பாயாக இருந்த காலத்தின் கதை கருவாக படம் இருக்கிறது. துபாயிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் இன்ஜினியர் விஜய் சேதுபதி பெண் குழந்தையுடன் இருக்கும் கத்ரினா கைஃப்பை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். இந்த நட்பு டேட்டிங் ஆக மாறுகிறது.

குழந்தையை தூங்க வைத்துவிட்டு விஜய் சேதுபதியுடன் ஜாலியாக ஊர் சுற்றி விட்டு வரும் கத்ரினா வீட்டுக்கு வரும்போது அவர் கணவர் இறந்து கிடக்கிறார். அதை பார்த்தவுடன் தப்பிக்க பார்க்கும் விஜய் சேதுபதி நான் ஒரு இன்ஜினியர் இல்லை என சொல்கிறார். அதைத்தொடர்ந்து உண்மையில் அவர் யார்? கொலையின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் கதை.

Also read: கத்ரீனா கைஃப் உடன் லிப்லாக், அமங்களப்படுத்தும் விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் மேரி கிறிஸ்மஸ் ட்ரெய்லர்

ரோலர் கோஸ்டர் போல பல மர்மமான சம்பவங்களை டார்க் ஹியூமர் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை ஹீரோ, ஹீரோயின் இருவரும் உள்வாங்கி நடித்திருப்பது சிறப்பு. அதிலும் கத்ரினா தமிழுக்கு ஏற்றவாறு உதட்டசைவை கொடுத்திருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது.

அதேபோன்று பிஜிஎம், பாடல் என அனைத்தும் ரசிக்கும் படியில் இருக்கிறது. இருந்தாலும் பாடலின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். மேலும் மிக மிக பொறுமையாக நகரும் திரைக்கதை கொஞ்சம் சலிப்பை கொடுக்கிறது. ஆனாலும் திகில், மர்மம், ரொமான்ஸ், காமெடி என சுவாரசியமாகவும் இருக்கிறது.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான செட் அப், வீடு, தியேட்டர் என அந்த காலத்தை அப்படியே பிரதிபலித்திருப்பதும் சிறப்பு. ஆனால் சில காட்சிகள் ஏற்கனவே நாம் யூகிக்கும் படியாக இருப்பது ஒரு குறையாக இருக்கிறது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால் மெரி கிறிஸ்துமஸ் நல்ல பொழுதுபோக்கு அம்சமான படம் தான்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Also read: பாலிவுட்டால் விஜய் சேதுபதி இடம் ஏற்பட்ட மாற்றம்.. எல்லாம் கத்ரீனா கைஃப் வந்த நேரம் தான்

Trending News