Actor Vijay Director Venkat Prabhu: விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய பிறந்தநாள் அன்று அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு விட்டார். அதாவது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். அத்துடன் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியே வந்ததும் அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயமும் லீக் ஆகி நாலா பக்கமும் காட்டுத் தீ போல் தகவல்கள் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனால் லியோ படப்பிடிப்பு துவங்க ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரை எந்த ஒரு தகவலும் வெளியே வராமல் அவ்வளவு கச்சிதமாக சீக்ரெட்டை மெயின்டைன் பண்ணி வருகிறார்கள்.
Also read: விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!
ஆனால் தளபதி 68 படத்தின் டிஸ்கசன் மட்டும் தான் இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறது. அதற்குள் ஒவ்வொரு விஷயங்களும் வெளியில் வருவதால் விஜய் உச்சகட்ட கடுப்பிற்கு போய்விட்டார். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியே வந்துவிட்டது.
அதிலும் ஜோதிகா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியில் வந்ததும் வெங்கட் பிரபுவை விஜய் கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அத்துடன் இதே மாதிரி ஒவ்வொரு விஷயமும் வெளியில் போனது என்றால் இந்த ப்ராஜெக்ட்டை இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்.
அதனால் வெங்கட் பிரபு எப்படி வெளியில் போகுது என்று யோசித்த பொழுது, இந்த டிஸ்கஷன் நான்கு அசிஸ்டன்ட் டைரக்டர் மற்றும் இரண்டு கோ டைரக்டர் என ஆறு பேர் கொண்ட கும்பலுடன் தான் நாம் டிஸ்கஷன் நடத்திருக்கிறோம். அப்படி வெளியில் ஒவ்வொரு விஷயமும் போகுது என்றால் இவர்களைத் தவிர வேற யார் மூலமாகவும் போவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டார்.
அதற்காக வெங்கட் பிரபு ஒரு அதிரடியான முடிவை எடுத்து விட்டார். அதாவது இந்த ஆறு பேரையும் ஹவுஸ் அரஸ்ட் செய்து தனக்குத்தானே குவாரண்டைன் போட்டு விட்டார். ஒரு படத்தை எடுப்பதற்குள் என்னென்ன வேலை எல்லாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆனாலும் பெரிய ஸ்டார் படம் எடுப்பது என்றால் சாதாரண விஷயம் இல்லையே. எல்லாத்தையும் அனுபவித்து தானே ஆக வேண்டும்.
Also read: வெங்கட் பிரபு படத்துடன் ஜாலி பண்ண போகும் தளபதி.. உதயநிதியை அப்படியே பின்பற்றும் விஜய்