கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர் கடந்த 2013ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு 4.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். அது மட்டுமல்ல ட்விட்டர் ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இந்திய அளவில் நடிகர் விஜய் முன்னிலை வகித்து வருவதும், அவரை குறித்து தேடுபவர்களும் அதிகம் என ஏற்கனவே சோசியல் மீடியாவில் சாதனை புரிந்துள்ளார்.
Also Read: மாமனாரை ஓரங்கட்டிய மருமகன்.. விஜய், அஜித் செய்யாததை செய்து ரஜினியை தலை நிமிரச் செய்த தனுஷ்
இந்நிலையில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வமாக தனது கணக்கை துவங்கி உள்ளார். இவர் துவங்கிய சில நிமிடத்திலேயே 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர். மேலும் விஜய் முதல் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் கொட்டுகிற பனிமலை பேக்ரவுண்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதில் விஜய் செம க்யூட்டாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் மெய்மறந்து பார்க்கின்றனர். அதுமட்டுமல்ல இந்த புகைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லைக் போட்டுள்ளார். மேலும் விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ் இன்ஸ்ட்ரா பக்கத்தில் விஜய் கணக்கு துவங்கிய அடித்த நிமிடமே செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி திரை பிரபலங்கள் பலரும் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். இதுவரை விஜய்யின் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தான் அவருடைய படங்களின் ட்ரைலர், டைட்டில் போன்றவை வெளியாகும்.
அதேபோல் இனிமேல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரைக் குறித்த அப்டேட் வெளியாகும். ஒரு வேளை லியோ படத்தின் ப்ரமோஷனுக்காகவே, பத்து வருடங்கள் கழித்து இன்ஸ்ட்ரா கணக்கை விஜய் துவங்கி இருக்கிறாரோ! என்று திரை பிரபலங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் விஜய் முதல் முதலாக பதிவிட்ட புகைப்படம்

Also Read: விஜய்யிடம் சிபாரிசுக்கு சென்ற வாரிசு நடிகை.. மார்க்கெட் இழந்ததால் பரிதவிக்கும் நிலை