திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சஞ்சய்காக கதையை ரெடி செய்த பிரபல இயக்குனர்.. நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கூறிய விஜய்

விஜய்யின் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையொட்டி நேற்று சன் டிவியில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் பங்குபெற்ற நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நெல்சன் கேட்ட பல கேள்விகளுக்கும் விஜய் தன்னுடைய பாணியில் மிகவும் சுவாரசியமாக பதிலளித்தார்.

வழக்கமாக விஜய் தன்னுடைய படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது ரசிகர்களை கவரும் வகையில் அரசியல், சினிமா என்று அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுவார். அதனால் பீஸ்ட் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவை காண ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்திற்கு ஆடியோ லான்ச் பங்ஷன் நடைபெறவில்லை. இதனால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக சன் டிவியில் நேற்று விஜய்யின் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் அவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு விஷயத்தை தெரிவித்தார்.

பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகரின் வாரிசுகள் ஹீரோவாக நடிப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகனும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் ஆசைப்பட்டனர். இதை குறிப்பிட்டு பேசிய விஜய் தன்னுடைய மகன் சஞ்சய் என்ன ஆசைப்படுகிறாரோ அதற்கு நான் எப்போதும் சப்போர்ட் செய்வேன்.

என்னுடைய விருப்பத்தை நான் அவரிடம் திணிக்க மாட்டேன். அவருடைய விருப்பம் தான் எனக்கு முக்கியம் என்று கூறினார். மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்க்காக ஒரு கதையை ரெடி செய்து கூறியதாகவும் அந்த கதை தனக்குப் பிடித்ததாகவும் விஜய் தெரிவித்தார்.

அதற்கு சஞ்சய் இன்னும் இரண்டு வருடம் எனக்கு டைம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் கூடிய விரைவில் இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் இந்த திரைப் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே பற்றியும் தெரிவித்துள்ளார்.

அதாவது இவர்களுடைய இந்த ஜோடி அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்றும் அனிருத்தின் இசையில் இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் அவர் பீஸ்ட் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். தற்போது சஞ்சய் பற்றி விஜய் கூறிய இந்த தகவல் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்ய தகவலாக இருக்கிறது.

Trending News