Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

விஜய், ஸ்டாலின், ரஜினி, இபிஎஸ்… ஒரே இடத்தில் சங்கமித்த பிரபலங்கள்! அனிருத் திருமண

விஜய், ஸ்டாலின், ரஜினி, இபிஎஸ்… ஒரே இடத்தில் சங்கமித்த பிரபலங்கள்! அனிருத் திருமண

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் முக்கிய நிர்வாகியான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் தேதி இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து,சென்னையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இந்த விழாவில் அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் ஒரே இடத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்துக்கொண்ட நிகழ்வு பெரும் கவனம் பெற்றுள்ளது.அதேபோல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,ரஜினிகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக நின்று உரையாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


மேலும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ள முடியாத நிலையில்,மணமக்களுக்கு தனது வாழ்த்துக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,கமல்ஹாசன்,கனிமொழி,துரைமுருகன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.


திரையுலகைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் குடும்பத்தினர்,தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு,சித்தார்த்,அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.கிரிக்கெட் உலகைச் சேர்ந்த கேன் வில்லியம்சன்,டேல் ஸ்டெயின்,புவனேஷ்வர் குமார் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோரின் வருகையும் தனி கவனம் பெற்றுள்ளது.
அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்கள் வரை பலரும் சங்கமித்துள்ள இந்த திருமண வரவேற்பு விழா,சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான நட்சத்திர நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.