வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

வெங்கட் பிரபு செய்யும் தில்லாலங்கடி வேலை.. GOAT மீண்டும் சென்சருக்கு அனுப்பப்பட இதுதான் காரணம்

GOAT: ‘ பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிவிட்டார்’ என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்லுவார். இப்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கிய கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஜய் போன்ற ஒரு பெரிய ஹீரோவை இயக்குவதோடு மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பத்தை இந்த படத்தில் வைத்திருக்கிறார். இதனால் வெங்கட் பிரபுவுக்கு கோட் படம் ஒரு பெரிய பரீட்சை என்று தான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட இந்த படத்தின் ரிலீஸ் வெங்கட் பிரபுவுக்கு ஒருவித கலக்கத்தை தான் கொடுத்திருக்கிறது. எது எப்படியோ படம் எடுத்து முடித்துவிட்டு சென்சார் ஆகி வந்து விட்டது. இனி ரிலீஸ் ஆனால் எல்லாம் முடிந்தது என பட குழு நினைத்திருப்பார்கள்.

ஆனால் வெங்கட் பிரபு அதில் ஒரு பெரிய ட்விஸ்ட்டை இப்போது ஏற்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே சென்சார் போர்டுக்கு போய்விட்டு வந்த போர் படம் மீண்டும் சென்சார் போர்டுக்கு போகி இருக்கிறது. எதனால் வெங்கட் பிரபு இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் என எல்லோருக்கும் தோன்றலாம்.

மீண்டும் சென்சருக்கு அனுப்பப்பட இதுதான் காரணம்

ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு வந்த கோட் படம் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தில் கூடுதலாக 8 நிமிடங்களை இணைத்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

அதாவது விஜய் நடித்திருக்கும் கோட் படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஒளிபரப்பாகும். ஒரு வேலை படத்தை பார்த்த பிறகு ஏதாவது மாற்ற வேண்டுமென வெங்கட் பிரபு இல்லை ஆனால் விஜய்க்கு தோன்றியதா என தெரியவில்லை.

திடீரென இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் டிரைலரில் வெளியான போது தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்படவில்லை, இது என்ன விஜய்க்கு வந்த சோதனை என விஷமிகள் கிளப்பி விட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வெங்கட் பிரபுவுக்கு பயம் தொற்றிவிட்டது போல் தெரிகிறது. அதனால் தான் இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News