புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தளபதி-68 டைட்டில் வந்தாச்சு.. தொடர்ந்து ஆங்கில டைட்டிலால் ஏற்பட போகும் சர்ச்சை

Thalapathy 68 Title: தளபதி 68 படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டது என செய்திகள் வெளியாகி கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. பொறுமையா இருங்கப்பா, நல்ல நாள் பார்த்து நாங்களே டைட்டில் சொல்கிறோம் என சொல்லி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்குள்ளேயே படத்தின் உண்மையான டைட்டில் வெளியாகி அடுத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அட நடிகர் விஜய் என்றாலே சர்ச்சை தான் என சமீப காலமாக ஆகிவிட்டது. அப்படி இருக்கும் போது தளபதி 68 படத்தில் என்ன சர்ச்சை என்று கேட்டால், படத்தின் டைட்டிலே சர்ச்சை தான். விஜய்க்கு கடந்த சில படங்கள் எல்லாமே ஆங்கில டைட்டிலாக அமைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படத்தின் டைட்டில் வெளியாகும் பொழுதும் பஞ்சாயத்து கிளம்பி விடுகிறது. அப்படி இருந்தும் தளபதி 68 படத்திற்கும் ஆங்கில டைட்டிலை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் லியோ படம் முடிந்த கையோடு ஓய்வு கூட எடுக்காமல் உடனே தளபதி 68 படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தற்போது ஒட்டுமொத்த பட குழுவும் தாய்லாந்தில் பிஸியாக இருக்கிறார்கள். அதிலும் ஏற்கனவே விஜய் இப்போ பார்த்தாலும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் போல் தான் இருக்கிறார். அதையும் தாண்டி இந்த படத்தில் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி அவரை இன்னும் இளமையாக காட்ட இருக்கிறார்கள்.

Also Read:விடாமுயற்சி, தளபதி 68-ல் இருக்கும் ஒற்றுமையான விஷயங்கள்.. அட! ரிலீஸ் தேதியும் ஒன்னா?

விண்டேஜ் விஜய், இரட்டை வேடங்கள், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா என 90ஸ் கிட்ஸ்களுக்கு எனக்கு பிடித்த ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் ஒன்று கூடி இந்த படத்திற்கு எல்லாமே மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருக்கிறது. விஜய் எப்பொழுது எதில் சிக்குவார், அவரை வச்சு செய்யலாம் என்று காத்திருப்பவர்களுக்கு தொக்காக டைட்டிலை தூக்கி கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

தளபதி-68 டைட்டில்

ஏற்கனவே பீஸ்ட், லியோ என ஆங்கில டைட்டில்களாக இறக்குமதியாகிக் கொண்டிருக்கும் வேளையில் தளபதி 68 படத்தின் டைட்டில் GOAT. லியோ என்றால் தமிழில் சிங்கம் மாதிரி, கோட் என்றால் ஒருவேளை ஆட்டை சொல்கிறார்களோ என்று நினைக்க வேண்டாம். GOAT என்றால் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (Greatest of All Time) என்பதன் சுருக்கம் தான்.

உலகத்தில் உள்ள தலைசிறந்த பொருட்களை இந்த வார்த்தையை பயன்படுத்தி சொல்வார்கள். இந்த டைட்டில் தான் வெங்கட் பிரபு பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வர இருக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு டைட்டிலை தேர்ந்தெடுத்து இருப்பதால், அடுத்து தமிழை வளர்க்க வேண்டும், தமிழுக்கு பாதுகாப்பு என எத்தனை பேர் விஜய்க்கு எதிராக கொடி தூக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Also Read:அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.. அவரை பார்த்து பயந்து தான் கன்ஃபார்ம் ஆன தளபதி-69

Trending News