தளபதி69 பயனூரில் செட் போட்டு பாடல் காட்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் என்றாலே லியோ படத்திலிருந்து ஒரு புது கலாச்சாரத்தை கையாண்டு வருகிறார்கள். படத்தில் ஒரு விஷயம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதன் காரணமாக இதை செய்கிறார்கள்.
குறைந்தது 1000 முதல் 2000 ஆர்டிஸ்ட்களை கூப்பிட்டு டான்ஸ் ஆடுவது போல் ஒரு பாட்டை எடுத்து வருகிறார்கள். வாரிசு, லியோ என இந்த கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது தளபதி 69 படத்திற்கும் 2000 ஆர்டிஸ்ட்களை வைத்து பாடல் காட்சிகளை எடுக்கப் போகிறார்களாம்.
தலைவா படத்தில் இருந்து தளபதி செய்யும் அக்கப்போர்
தற்சமயம் பயனூரில் எடுத்து வரும் இந்த பாடலை விஜய்யே பாட போகிறாராம். தலைவா படத்தில் இருந்து, விஜய் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடலையாவது பாடியாக வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தி வருகிறாராம். அப்படி ஆரம்பித்தது தான் “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” பாடல்.
ஒரு குத்து பாடல் அதுவும் ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த பாடலை விரும்புகிறார் விஜய். கோட் படத்திலும் விசில் போடு பாட்டு ஆரம்பித்த கதை இதுதான். இப்படி விஜய் படத்துக்கு படம் ஒரு குத்துப் பாடலை பாடிக் கொண்டு வருகிறார். மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலும் இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரங்கேற்றப்பட்டது.
இப்பொழுது தளபதி 69 படத்திற்கும் ஒரு பாடலைப் பாட உள்ளார் அந்த பாடல் “ஒன்லாஸ்ட் சாங்” என்று ஆரம்பிக்கிறதாம். அதாவது விஜய்க்கு இது கடைசி படம் மட்டுமல்ல அவர் பாடக்கூடிய கடைசி பாடலும் இதுதான் என்பதை குறிக்கும் வகையில் தான் ஒன் லாஸ்ட் சாங் என்ற வரி.
- தளபதியின் முதலும், முடிவும்
- விஜய்யின் கடைசி படத்திற்கு பூஜை போட்டாச்சு
- விஜய்யின் சினிமா வியூகம் இதுதான், 2026-க்கு பின் இதுதான் நடக்கும்