Vijay: நேற்றிலிருந்து சோசியல் மீடியா முழுவதும் விஜய் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. அவர் தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதில் திரையுலகச் சேர்ந்த அத்தனை நட்சத்திரங்களும் போட்டோவுடன் அவருக்கு விஷ் செய்திருந்தனர். அதிலும் த்ரிஷா வெளியிட்ட போட்டோ இப்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
அதேபோல் ஒரு பெரிய சர்ச்சை வெடிக்க இது காரணமாகவும் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நம்ம கிட்ட இருந்து துப்பாக்கிய வாங்கிட்டு போனவர யாராச்சும் பாத்தீங்களா என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ட்வீட் போட்டு வருகின்றனர்.
திடீர் தளபதியை வெளுக்கும் விஜய் ஆதரவாளர்கள்
இது யாரைப் பற்றி என்பது அனைவருமே தெரியும். கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போன்ற ஒரு காட்சியை இருந்தது. அதிலிருந்து அவர் தான் அடுத்த தளபதி என பேசப்பட்டார்.
இது அவருக்கு ஒரு இலவச விளம்பரமாகவும் இருந்தது. அவருடைய மார்க்கெட் உயர இது ஒரு காரணம் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போது அவர் ஆளும் கட்சி பக்கம் சென்று விட்டார்.
அதனால் தான் ஆளும் கட்சியை எதிரியாக நினைக்கும் விஜய்க்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை என பேச்சு கிளம்பியுள்ளது. தளபதி ரசிகர்களும் இதை வைத்து அவரை திட்டி தீர்க்கின்றனர்.
உண்மையில் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவிக்காதது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன், பராசக்தி இரு படங்களும் நேருக்கு நேர் மோத இருக்கிறது.
அப்போதே சிவகார்த்திகேயனின் தில்லாலங்கடி வேலை தெரிந்து விட்டது. அதனால் இது எதிர்பார்த்தது தான் என விஜய் ஆதரவாளர்கள் திடீர் தளபதியை போட்டு வெளுக்கின்றனர்.




