Vijay: எரிகிற வீட்டில் புடுங்குனது மிச்சம் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படி தான் ஆகிவிட்டது கேப்டன் விஜயகாந்தின் மரணம் கூட. ஒரு பக்கம் இந்த அனுதாபத்தை விட்டு விடாமல் அதே நேர்கோட்டில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு அவருடைய சொந்த மனைவியே நேற்றிலிருந்து களத்தில் இறங்கி இருக்கிறார். மறுபக்கம் தங்களுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் தளபதியின் விசுவாசிகள்.
கேப்டன் விஜயகாந்தின் மரணத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்தது விஜய் மக்கள் இயக்கத்திற்கு பெரிய பாசிட்டிவ் விஷயமாக மாறிவிட்டது. இதன் மூலம் எப்படியாவது மக்களின் மனதில் நடிகர் விஜய் நின்று விட வேண்டும் என்று அவருடைய விசுவாசிகள் சமூக வலைத்தளத்தில் செய்து கொண்டிருக்கும் வேலை, எப்போ போதுண்டா சாமி முடியல என்பது போல் இருக்கிறது.
மட்டமான வேலை பார்க்கும் விசுவாசிகள்
விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு விஜய் கலந்து கொண்ட நேரத்தில் இருந்து விஜய் மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டி படத்தின் காட்சிகள் சமூக வலைத்தளத்தின் திடீரென வைரல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது. விஜய் இனிமே நீதான் அம்மாவ பாத்துக்கணும், விஜய் நீதான் அண்ணன பார்த்துக்கணும் என அந்த படத்தில் வந்த வசனங்களை எல்லாம் இப்போது ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்.
Also Read:விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம் ரெடி.. மீண்டும் திரையில் கேப்டன்
விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வந்த விஜய் மறுநாளே புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் கொடுக்க நேரில் சென்றார். அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட நிறைய வீடியோக்களை சோசியல் மீடியாவில் ட்ரெண்டு செய்து வருகிறார்கள். அவருடைய மனிதாபிமானம் மற்றும் அரசியல் நோக்கம் இதில் நன்றாக தெரிகிறது.
ஆனால் இதில் சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த் பெயரை சேர்ப்பது தான் ரொம்பவும் மட்டமாக இருக்கிறது. அதாவது அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்பவர்கள் அடுத்த கேப்டன் வந்து விட்டார், கேப்டன் இடத்தில் நீங்கள் தான் இருக்க வேண்டும், அண்ணனின் வழியில் தம்பி என கமெண்ட் செய்வது விரும்பத்தகாத விஷயமாக இருக்கிறது.
ஒரு நல்ல மனிதனின் மரணம் ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக வியாபாரமாக்கப்படுவது ரொம்பவும் அசிங்கமான விஷயம். எம்ஜிஆர் அவருக்கு தெரிந்த அரசியலை செய்தார், விஜயகாந்த் அவருக்குத் தெரிந்த அரசியலை செய்தார் அதேபோல் அடுத்து விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய வழியில் தான் பயணிக்க வேண்டுமே தவிர, வாழ்ந்து மறைந்த ஒருத்தரின் நிழலில் இருக்கக் கூடாது. அதை விஜய்யும் விரும்ப மாட்டார்.
Also Read:விஜய்யை தேடிய பாட்டி, ஓவர் ஆக்டிங் செய்த புஸ்ஸி.. தளபதி செய்த தரமான சம்பவம்