பின்னணி பாடகர்களை மிஞ்சிய விஜய்.. தயாரிப்பாளர்களுக்கு செலவில்லாமல் பாடும் 6 நடிகர்கள்

Singer Vijay: தற்பொழுது ஹீரோக்கள், தான் நடிக்கும் படங்களில் ஒரு சில பாடல்களை இவர்களே பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு பாடலின் மூலம் மக்களை ஈர்க்க, முயற்சிக்கும் இவர்கள் வெற்றியையும் அடைந்து விடுகின்றனர்.

நட்புக்காக இவர்கள் தன் குரலால், பிறருக்கும் பாடி கொடுத்து வெற்றியும் கண்டுள்ளனர். அவ்வாறு பின்னணி பாடகர்களைப் போல சிறப்பாக பாடி தயாரிப்பாளர்களுக்கு செலவை குறைத்த 6 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: கல்யாணத்துக்கு பின் ராசி இல்லாமல் போச்சு.. முதலிடத்தை பிடிக்க துடிக்கும் நயன்தாராவின் 75வது படம்

கமலஹாசன்: நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஜாம்பவானாய் திகழும் கமலஹாசன் பாட்டையும் விட்டு வைக்காமல் பாடிய அசத்திய பாடல்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக, போட்டு வைத்த காதல் திட்டம், கந்தசாமி மாடசாமி, ஆழ்வார்பேட்டை ஆண்டவா, கண்மணி அன்போடு காதலன், தென்பாண்டி சீமையிலே, சமீபத்தில் பத்தல பத்தல பாடல்கள் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறார்.

சிலம்பரசன்: முன்னணி ஹீரோவாக வலம் வரும் இவர் பின்னணி பாடகர் போல பாடலையும் பாடி அசத்தி வருகிறார். அவ்வாறு இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்களில் எவண்டி உன்ன பெத்தான், லூசு பெண்ணே, தீ தளபதி போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் டூப்பராய் மாறியது. இதை பொருட்டு பார்க்கையில், இவர் இசை மீது கொண்ட ஆர்வம் புலப்படுகிறது.

Also Read: ஜெயிலர் படத்தை ஓட வைக்க அண்ணாமலையாரை தரிசித்த சூப்பர் ஸ்டார்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

விஜய்: 90ஸ் காலகட்டத்தில் நடிப்பை மேற்கொண்ட இவர் அப்பொழுதே பாட்டிலும் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார். அவ்வாறு இவர் மேற்கொண்டு எண்ணற்ற பாடல்கள் மூலம், மக்களின் பேர் ஆதரவை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர் மேற்கொண்ட பாடலான வெறித்தனம், குட்டி ஸ்டோரி, ஜாலியோ ஜிம் கானா, ரஞ்சிதமே, நான் ரெடி தான் வரவா என்ற பாடலின் மூலம் தொடர் வெற்றியை சந்தித்து வருகிறார்.

தனுஷ்: நடிப்பை மீறி இசையிலும் ஆர்வம் காட்டும் இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்கள் மூலம் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். வொய் திஸ் கொலவெறி, ரவுடி பேபி, வாட்ட கருவாடு, தாய்க்கிழவி, உன்னோடு நடந்தால், வா வாதி போன்ற பாடல்கள் இவர் குரலில் வெற்றி கண்டது. இவர்களின் இசை ஆர்வத்தால் தயாரிப்பாளர்கள் தரப்பில் செலவு மிச்சம் செய்யப்படுகிறது.

Also Read: கார்த்தி பட ஹீரோயின்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி.. தமன்னாவை நோஸ்கட் செய்த முத்தழகு

சிவகார்த்திகேயன்: இவர் முன் உதாரணமாக ஹீரோக்களைக் கொண்டு, இசையில் முயற்சி எடுத்த இவர் தன் படங்களில் ஒரு சில பாடல்களை பாடி வருகிறார். அவ்வாறு வாயாடி பெத்த புள்ள, ஹம்டி டம்டி, எங்க வேணா கோச்சிக்கின்னு போ, வண்ணாரப்பேட்டையில போன்ற பாடல்களில் மாஸ் காட்டி வருகிறார்.

சித்தார்த்: பன்முக திறமை கொண்ட இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், மேலும் பாடகர் ஆகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார். இருப்பினும் இவருக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்காதது வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: அனுஷ்கா மாதிரி எனக்கு கேரியர் போயிடக் கூடாது.. உடல் எடை குறைத்த ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்