Vijay: தைத்திருநாள் ஆன இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் வைத்து இன்றைய நாளை வரவேற்றுள்ளனர்.
அதில் திரை பிரபலங்கள் அனைவரும் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் கொண்டாடி இருக்கும் பொங்கல் வீடியோ தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் விசிட் தான்.
சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய்
தி ரூட் நிறுவனம் நடத்திய பொங்கல் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் நடிகர் கதிர், கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஸ்டைலிஷ் லுக்கில் என்ட்ரி கொடுத்தார் விஜய். அங்கு வந்த அவர் அனைவருடனும் சிரித்து பேசி பொங்கல் பானையில் அரிசி போட்டு என மாஸ் காட்டிவிட்டார்.
மேலும் அந்த நிகழ்வில் பானை அடிப்பது, மியூசிக் சேர் உட்பட பல போட்டிகள் நடந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் வழக்கம்போல குதூலத்துடன் பங்கேற்றார்.
இப்படியாக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் விஜயின் இந்த லுக் தான் தளபதி 69 கெட்டப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.