ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விஜய்யை பார்த்து மிரளும் ஹைதராபாத்.. இளம் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் தளபதி

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இது குடும்ப சென்டிமென்ட் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 15 நாட்கள் ஹைதராபாத்தில் ஷூட்டிங் மீதம் உள்ளது.

இதற்காக தற்போது விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு தளபதி 66 படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். தினமும் காலை 10 மணிக்கு வரும் விஜய் சாயங்காலம் 6 மணி வரை சூட்டிங்கில் கலந்து கொள்கிறாராம்.

ஒரு நாள் கூட தவறாமல் கரெக்டாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனக்கு கொடுத்த வேலை சரியாக முடித்துவிட்டு செல்கிறாராம். மேலும் ஷூட்டிங் முடிந்ததும் விஜய் கேரவனுக்குள் போய் ஓய்வு எடுப்பது கிடையாதாம். எங்கே ஷூட்டிங் நடக்கிறது அங்கேயே ஒரு சாதாரண சேர் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாராம்.

அதன்பின் உடனே அடுத்த ஷாட்டுக்கு ரெடி ஆகிவிடுவாராம். சாப்பாடு நேரத்தில் மட்டும்தான் கேரவனுக்குள் விஜய் செல்கிறாராம். ஆனால் தற்போது உள்ள இளம் நடிகர்கள் எப்போது சாட் முடியும் உடனே கேரவனுக்குள் போவோம் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சில நடிகர்கள் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திலும் வருவதில்லை. மேலும் தற்போதுள்ள நடிகர்கள் மூத்த நடிகர்களை மதிப்பதில்லை என்ற செய்தியும் தற்போது பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விஜய் இருக்கிறார்.

இவரைப் பார்த்த அடுத்த தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், விஜய் படப்பிடிப்பில் பார்த்த ஹைதராபாத் ரசிகர்கள் விஜய் இப்படி ஒரு டெடிகேஷனா ஆளா என்று ஆச்சரியப்படுகின்றனர். மேலும் இதனால் தான் விஜய் தற்போது வரை மாஸான நடிகராக வலம் வருகிறார்.

Trending News