திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

49வது பிறந்தநாளில் கமலுடன் கூட்டணி போடும் விஜய்.. உறுதி செய்த படக்குழு

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் விஜய்யின் 49வது பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. இதை தாறுமாறாக கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் இப்போதிலிருந்து பிளான் செய்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களை விட விஜய்யும் ஒரு படி மேலே சென்று பிறந்த நாளில் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அன்றைய தினத்தில் கமலுடன் கூட்டணி போட்டு தரமான சம்பவத்தை செய்ய திட்டமிட்டுள்ளார். விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே மிச்சம் இருப்பதால் சில தினங்களில் அதையும் முடித்துவிட்டு அடுத்ததாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு இறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

Also Read: உச்சகட்ட பயத்தில் நெல்சன், களத்தில் இறங்கிய தளபதி.. மாஸாக வரப்போகும் அப்டேட்

இந்த நிலையில் லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை அவருடைய 49வது பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்யும் உறுதியான முடிவை படக்குழு எடுத்துள்ளது. இந்த வீடியோவிற்கு உலக நாயகன் கமலஹாசன் தான் பின்னணி குரல் கொடுக்கிறார். ஏற்கனவே கமல் பொன்னியின் செல்வன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவிற்கும் குரல் கொடுத்து ட்ரெண்ட்டாக்கினார்.

அதேபோல லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் உலக நாயகனின் குரலில் தான் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டால் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்து விடும். அதனால் விஜய்யின் பிறந்தநாளில் ஏதாவது ஒரு போஸ்டர் மட்டும் ரிலீஸ் செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

Also Read: விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

ஆனால் விஜய் ரசிகர்களுக்காக தயாரிப்பாளரிடம் பேசி கிளிம்ஸ் வீடியோவை வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கிவிட்டார். அதனால்தான் இப்போது லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ, வரும் ஜூன் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற தகவல் படக்குழுவினரின் தரப்பிலிருந்து உறுதியாக வெளிவந்துள்ளது.

இதைக் கேட்ட ரசிகர்களும் குத்தாட்டம் போட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், இப்போதிலிருந்தே தளபதிக்கு சோசியல் மீடியாவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கி விட்டனர். மேலும் லியோ பட கிளிம்ஸ் வீடியோவை பார்க்கவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: அப்பாவோட அவஸ்தை எனக்கும் தெரியும்.. லோகேஷிடம் தளபதி விஜய் கூறிய சீக்ரெட்

Trending News