திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசு நடிகரின் வாழ்க்கையை திசை திருப்பிய விஜய்.. ஆனா இவரு அஜித்தோட தீவிர ரசிகர் ஆச்சே

அஜித், விஜய் எனும் இரு பெரும் நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் தான் தற்போது அதிகமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான ஒரு நடிகரின் வாழ்க்கையை திசை திருப்பி உள்ளார் விஜய்.

அதாவது சாதாரணமாக விஜய் மேடையில் பேசும்போதே ரசிகர்களுக்கு ஏதாவது கருத்து சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார். அவரது படங்களின் ஆடியோ லான்ஜில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிகே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் வாரிசு நடிகர் ஒருவருக்கு விஜய் அறிவுரை சொல்லி உள்ளார்.

Also  Read :விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் இடைப்பட்ட காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்துள்ளார். அப்போது அவருடைய நட்பு வட்டாரம் மற்றும் குடும்பம் இனிமே நடிப்பு வேண்டாம் வேற ஏதாவது செய்யலாம் என கூறியுள்ளனர். இதனால் படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு அருண் விஜய் வந்துள்ளார்.

அப்போது விஜய் மற்றும் அஜித் இருவரும் மிகப்பெரிய நடிகர்களாக இருந்ததால் அவர்களது படத்தை தயாரிக்க அருண் விஜய் முன்வந்துள்ளார். அஜித்தின் தீவிர ரசிகர் தான் அருண் விஜய். இதனால் அஜித் படத்தை தயாரிக்கலாம் என முன்வந்த போது அவர் வேறு ஏதோ படத்தில் பிஸியாக இருந்துள்ளார். இதனால் விஜய்யின் மேனேஜருக்கு போன் செய்து விஜயை சந்திக்க அருண் விஜய் கேட்டுள்ளார்.

Also  Read :சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அந்த சமயத்தில் விஜய் அவருடைய வீட்டுக்கு அழைத்து தன்னை உபசரித்ததாக அருண் விஜய் கூறியிருந்தார். அப்போது படங்கள் எதுவும் சரியாக போகாததால் நடிப்பை கைவிட்டு விட்டு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக அருண் விஜய் கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜய் ஷாக் ஆகிவிட்டாராம். என்னை விட நீங்க நல்லா டான்ஸ் ஆட கூடியவர்.

உங்களைப் பற்றி என்னுடைய நண்பன் சஞ்சவ் கிட்ட நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறேன். உங்களது திறமைக்கு கண்டிப்பாக நேரம் வரும். அந்த சமயத்தில் கண்டிப்பாக நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள் போன்று விஜய் கூறியுள்ளார். ஒரு மிகப்பெரிய நடிகர் வாயால் இதுபோன்ற பாராட்டுக்கள் கிடைத்தவுடன் அருண் விஜய் அங்கேயே கண் கலங்கிவிட்டாராம்.

Also  Read :அருண் விஜய்க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய 5 படங்கள்.. நெகட்டிவ் ரோலில் கொடுத்த ரீ என்ட்ரி

அதன் பின்பு அருண் விஜய் வீட்டுக்கு வந்தவுடன் நடிப்பை எப்போதுமே விடக்கூடாது என்ற முடிவை எடுத்தாராம். விஜய் சொன்ன அந்த வார்த்தையால் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டதாக அருண் விஜய் கூறியிருந்தார். அதுவரை ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டு இருந்தார். தொடர்ந்து இப்போது மாஸ் காட்டி வருகிறார்.

Trending News