சன் டிவி சீரியல் நடிகருடன் கல்யாணத்திற்கு தயாரான விஜய் டிவி நடிகை.. ரகசியத்தை உடைத்த பல்லவி

Serial Actress: சின்னத்திரை ஆர்டிஸ்ட்கள் பொருத்தவரை அவர்களுக்கான வாழ்க்கை துணையை அவர்களின் கேரியரிலேயே தேர்வு செய்து விடுவது வழக்கமாகி வருகிறது. அப்படித்தான் சரவணன் மீனாட்சி, ஆலியா மானசா, சித்து ஸ்ரேயா போன்ற பல ஆர்டிஸ்ட்டுகள் காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த லிஸ்டில் தற்போது விஜய் டிவி நடிகை இணைந்திருக்கிறார். அதாவது சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்ற சீரியல் மூலம் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்த ஆர்த்தி சுபாஷ் என்பவர் நடிப்பால் மக்களை கவர்ந்தார். இந்த நாடகத்திற்கு பிறகு விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் பல்லவி கேரக்டரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு தற்போது சிந்து பைரவி என்ற சீரியலில் பைரவி கேரக்டரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சன் டிவி சீரியல் நடிகருடன் காதலில் விழுந்திருக்கிறார். இதுவரை காதலனை வெளிப்படுத்தாத ஆர்த்தி சுபாஷ் தற்போது இணையதளத்தில் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

ஆர்த்தி சுபாஷின் காதலன் யார் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி என்ற சீரியலின் கதாநாயகன் பவன் ரவீந்தர் தான். இதை நேற்று இவருடைய பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படத்தை ஆர்த்தி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய கல்யாணம் கூடிய விரைவில் நடைபெறப்போகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →