Mollywood Me Too: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி ஆட்டம் காண வைத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியான இந்த அறிக்கையினால் நிறைய மலையாள நடிகர்கள் செய்த சில்மிஷ வேலைகள் புகார்களாக வந்திருக்கிறது.
இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுப்பது தான் அடுத்த வேலை. அதற்குள் மலையாள நடிகர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருந்த நிறைய பேர் ராஜினாமா செய்து விலகிக் கொண்டார்கள்.
மலையாள உலகில் நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனை வெளியில் வந்த பிறகு நிறைய நடிகைகள் மனம் விட்டு பேசி இருக்கிறார்கள். நடிகையும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியும் ஆன அமலா மற்றும் நடிகை சமந்தா போன்றோர் தெலுங்கு சினிமாவிலும் இது போன்ற கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள்.
பரபரப்பை கிளப்பிய விஜய் டிவி பிரபலம்
அத்தோடு நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற கமிட்டி அமைக்க வேண்டும் என சொல்லியிருந்தார். போதாத குறைக்கு மெட்டிஒலி பிரபலம் சாந்தி வில்லியம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பற்றி எக்கச்சக்க புகார்கள் சொல்லி இருக்கிறார்.
தற்போது விஜய் டிவி பிரபலம் ஒருவரும் இந்த ஹேமா கமிட்டி பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். விஜய் டிவியில் பிரபல சீரியல் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர்தான் நடிகை ரேகா நாயர். சின்னத்திரை நடிகை VJ மரணத்தின் போது இவர் கொடுத்த பேட்டி பெரிய அளவில் வைரலானது.
அது மட்டுமில்லாமல் ரொம்ப தைரியமாக பயில்வான் ரங்கநாதனிடம் இவர் நேருக்கு நேர் நின்று சண்டையிட்ட வீடியோவும் வைரல்தான். இப்படி மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடிய ரேகா நாயர் கமிட்டி பற்றியும் பேசி இருக்கிறார்.
அதில் மலையாள சினிமாவில் நடந்தது போன்று தமிழ் சினிமாவிலும் கமிட்டி வைக்க வேண்டும். அப்படி இங்கு கமிட்டி வைத்தால் லட்சக்கணக்கில் புகார்கள் குவியும். 500க்கும் மேற்பட்ட நடிகர்கள் சிக்குவார்கள் என பரபரப்பான பேட்டியை கொடுத்திருக்கிறார் ரேகா நாயர்.
மலையாள சினிமாவை கிடுகிடுக்கும் மீ டு பிரச்சனை
- ரியாஸ்கான் மீது மலையாள நடிகை கொடுத்த புகார்
- முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்
- கோபத்தில் கொந்தளித்த பிக்பாஸ் நடிகை