வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸில் கலந்து கொள்ளும் முதல் 5 போட்டியாளர்கள்.. இரண்டு விவாகரத்து பிரபலங்களை தட்டி தூக்கிய விஜய் டிவி

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கவுள்ளது. இதில் 18 போட்டியாளர்கள் கொண்டு தொடங்கப்படும் இந்நிகழ்ச்சியில் இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் யார் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களே பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் வெல்வார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது.

விஜய் டிவியில் பிக்பாஸ் ஒளிபரப்பாகிறது என்று தெரிந்தாலே மற்ற சேனல்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள். ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது விஜய் டிவியின் டிஆர்பி எப்போதுமே முதல் இடத்தில் இருக்கும். இதற்காக மற்ற சேனல்கள் பல புதுவிதமான நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினாலும் பிக்பாஸ் முன்பு அவை அனைத்தும் செல்லுபடி ஆகாது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள 5 போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முதலாவதாக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்சன் கலந்து கொள்ளயுள்ளார். சென்ற சீசனில் இதேபோன்று தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 2வது போட்டியாளராக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜலட்சுமி கலந்து கொள்ளயுள்ளார். இவர் நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவர். இதனால் பிக்பாஸ் வீட்டில் நல்ல பொழுதுபோக்கு வேண்டுமென்பதற்காக ராஜலட்சுமியை தேர்வு செய்துள்ளனர். கடந்த சீசனில் சூப்பர் சிங்கரில் இருந்து ஆஜித் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளயுள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மேலும் விஜய் டிவி இரண்டு விவாகரத்து பிரபலங்களை தட்டி தூக்கியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் டி இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு விஜய் டிவி ஆராய்ந்து தரமான 5 போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது. அடுத்தடுத்த போட்டியாளர்களின் பெயர் விரைவில் வெளியாகும். இந்த சீசனில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சிம்பு தொகுத்து வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News