Home Tamil Movie News யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு.. அழுமூஞ்சி ஜாக்குலின், உப்பு சப்பில்லாத பிக்பாஸ் 8 Day 2

யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு.. அழுமூஞ்சி ஜாக்குலின், உப்பு சப்பில்லாத பிக்பாஸ் 8 Day 2

biggboss 8
biggboss 8

Biggboss 8 Day 2: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் ஒரு வழியாக முடிந்து விட்டது. நேற்று வீட்டுக்குள் போட்டியாளர்களின் மனநிலை என்ன பஞ்சாயத்து நடந்ததா என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

முதல் நாள் கேப்டன்சி டாஸ்க் நடந்த பிறகு ரவீந்தருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவரை டாக்டர்கள் பரிசோதித்தது முதல் வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு சப்போர்ட் செய்த காட்சிகள் காட்டப்பட்டது. அதை அடுத்து இரண்டாவது நாளின் தொடக்கத்தில் கருகரு கருப்பாயி என்ற பாடலோடு போட்டியாளர்கள் தங்கள் நாளை ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு ஆண்கள் அணியில் இருந்து ஒரு நபர் பெண்கள் அணியில் இருந்து ஒரு நபர் இடம் மாற வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி ஆண்கள் அணியில் இருந்து முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு வருவதாக தீர்மானம் செய்யப்பட்டது.

ஆனால் பெண்கள் அணியில் நான் போகிறேன் என ஜாக்குலின் அனத்தி கொண்டிருந்தார். இதனால் கடுப்பான சுனிதா நீ அங்க போறது என்டர்டெயின்மென்ட் கிடையாது என முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட்டார்.

இதற்காகவே காத்திருந்த ஜாக்குலின் வழக்கம் போல அழுகாச்சி நாடகத்தை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு பவித்ரா ஆண்கள் அணிக்குள் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜாக்லின் அங்கும் வந்து ஏழரையை கூட்டினார்..

ஜாக்குலினை கண்டுக்காத சுனிதா

இது வாக்குவாதமான நிலையில் பவித்ரா ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தார். இப்படியாக பெண்கள் அணி எப்போதும் இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது ஏன் என்று தான் தெரியவில்லை.

ஒரு வழியாக பவித்ரா முத்துக்குமரன் இடமாற்றம் செய்தனர். இதில் பவித்ரா ஆண்கள் பயன்படுத்தும் பாத்ரூமை தான் உபயோகிக்க வேண்டும். அதே விதி தான் முத்துக்குமரனுக்கும். அதன் பிறகு ஷாப்பிங் டாஸ்க் நடந்தது.

இதில் ஆண்கள் அணியில் உப்பு இல்லாததால் பெண்கள் அணி அதை வைத்தே விளையாட்டை தொடங்கினார்கள். இதற்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என ரவீந்தர் நீங்கள் உப்பு தரவில்லை என்றால் உங்களுடைய மளிகை பொருட்களை நாங்கள் கொடுக்க மாட்டோம் என எச்சரித்தார்.

உடனே ஜாக்குலின் சரி பரவாயில்லை எத்தனை நாள் ஆனாலும் சாப்பிடாமல் இருப்போம் என கெத்து காட்டினார். ஆனால் சிறிது நேரத்திலேயே சரி சரி நாங்க உப்புக் கொடுக்கிறோம் நீங்க மளிகை பொருட்கள் கொடுங்க என இறங்கி வந்தது பெண்கள் அணி.

பசி வந்தால் பத்தும் பறக்கும்னு சும்மாவா சொன்னாங்க. இப்படியாக நேற்றைய நாள் உப்பு சப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இது ஆரம்பம் தானே போகப் போக நாம் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் நடக்கும்.

- Advertisement -spot_img