வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அவார்டா கொடுக்குறாங்க இப்படி நடிக்கிறீங்க.. தலைவன் செய்த பிராங்க், கடுப்பில் பெண்கள் அணி பிக்பாஸ் 8 Day 3

Biggboss 8 Day 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான நேற்று சிறப்பான சம்பவங்கள் நடைபெற்றது. சாதாரணமாக போடப்பட்ட பிளான் போகப் போக வெறித்தனமாக மாறி பத்தல பத்தலை என்ற ரேஞ்சுக்கு எண்டு கார்டு போட்டும் தொடர்ந்தது.

இப்படி ரணகளமாக முடிந்த மூன்றாவது நாளில் நடந்த சம்பவங்கள் பஞ்சாயத்துக்கள் பற்றி காண்போம். முதலிலேயே பிக் பாஸ் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என சொந்த பாட்டை போட்டு போட்டியாளர்களை எழுப்பி விட்டார்.

அதை அடுத்து சிறு சிறு வாக்குவாதங்களுடன் நேரத்தை கடத்தி வந்தர் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்கை அறிவித்தார். கொடுக்கப்படும் ஐந்து டாஸ்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வீட்டு வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடந்த டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றி பெற்றது. இதில் இடமாற்றம் செய்திருக்கும் முத்துக்குமரன், பவித்ரா இருவரும் வேண்டுமென்றே தோத்தாங்குலி ஆனது போல் தோன்றியது. அதன் பிறகு நடந்தது தான் தரமான சம்பவம்.

என்னை டீ போட்டு கூப்பிடாத என விஷாலிடம் ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்தார் பவித்ரா. உடனே இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் மற்ற போட்டியாளர்கள் இறங்கினார்கள். ஆனாலும் உன்னை சும்மா விடமாட்டேன் என எகிறி கொண்டு வந்த பவித்ராவுக்கு போட்டியாக விஷாலும் கத்திக் கொண்டு திரிந்தார்.

ரஞ்சித் ரவீந்தர் செய்த பிராங்க்

இவர்கள் இருவரையும் ஆளுக்கொரு பக்கம் சமாதானம் செய்து வந்த ரஞ்சித், ரவீந்தர் அடுத்த சண்டைக்கு ஆயத்தமானார்கள். கை நீட்டி பேசாத மரியாத அவ்வளவுதான் என ஆரம்பித்து எங்கே வெட்டு குத்து ஆகிவிடுமோ என போட்டியாளர்கள் பயப்படும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தது.

அதன் பிறகு தான் தெரிந்தது இது ஒரு பிராங்க் என்று. இது ஆண்கள் அணியில் இருப்பவர்களுக்கு முன்பே தெரியும். ஏற்கனவே ஸ்கிரிப்ட்டை தயார் செய்ததால் அவர்கள் துள்ளி குதித்து அலப்பறை செய்தனர். ஆனால் பெண்கள் அணி என்னடா நடக்குது இங்க என்ற ரேஞ்சில் பியூஸ் போன பல்பு போல் இருந்தனர்.

இதுதான் அடுத்த கட்ட பஞ்சாயத்துக்கு அஸ்திவாரம் போட்டது. ரவீந்தர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் ரஞ்சித் நாமினேஷனில் இருக்கிறார். அதனால் தான் இப்படி ஒரு சண்டையை போட்டு கன்டென்ட் கொடுத்தோம் என உண்மையை போட்டு உடைத்தார்.

இதனால் பெண்கள் அணி பத்ரகாளியாக மாறிவிட்டது. ஏனென்றால் நம்ம தலைவன் ரஞ்சித் நடிப்பு அப்படி. நெஞ்சு வலிக்குது வாந்தி வருது என அவர் செய்ததை பார்த்தால் உண்மையிலேயே அவருக்கு ஏதோ பிரச்சனை என்று தான் நினைக்கத் தோன்றியது. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அவருடைய மொத்த நடிப்பு திறமையும் இங்கே இறக்கி விட்டார்.

இதை தாங்க முடியாத ஜாக்குலின், தர்ஷா ஆகியோர் பவித்ராவிடம் சண்டைக்கு நின்றார்கள். முடிந்த அளவு போராடி பார்த்த பவி ஒரு கட்டத்தில் வேணாம் விட்டுடுங்க என்ற ரேஞ்சுக்கு கதற ஆரம்பித்து விட்டார்.

இப்படியாக நேற்றைய நாள் கொடூரமாக முடிந்தது. இதில் தீபக் ரவீந்தரிடம் நீங்கள் உண்மையை சொல்லி இருக்கக் கூடாது ஆடியன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது நல்லதே கிடையாது என சரியான அறிவுரையை கூறினார்.

அதில் உண்மை இருப்பதால் ரவீந்தரும் பேச முடியாமல் குற்ற உணர்வோடு இருந்தார். அதன் பிறகு எல்லோரும் பவியை சமாதானம் செய்தது வேறு கதை. இந்த பஞ்சாயத்து விஜய் சேதுபதி கையில் கிடைத்தால் லட்டு போல் மாறிவிட்டது.

வார இறுதியில் பார்வையாளர்களை எப்படி கவரலாம் என யோசித்தவருக்கு அல்வா போல் கன்டன்ட்டை தூக்கி கொடுத்துள்ளனர் போட்டியாளர்கள். இதை அவர் எப்படி டீல் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News