புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவின் கேம் பிளான், அன்ஷிதாவின் ரியல் குணம்.. பிக்பாஸ் 8 Day 8

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீந்தர் வெளியேறிய பிறகு நேற்றைய எபிசோட் ஒரு மாதிரியாக சென்றது. நிகழ்ச்சி இனிமேல் தான் சூடு பிடிக்கும் என்பதால் போட்டியாளர்கள் அவ்வப்போது கண்டென்ட் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்றைய நாளில் நடந்த சம்பவங்களை பற்றி காண்போம். இதில் முத்துக்குமரன் நிகழ்ச்சிக்காக ஏகப்பட்ட ஹோம் வொர்க் செய்து வந்திருப்பார் போல. அதையே ஒரு யுக்தியாக மாற்றி ஆண்கள் அணியிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்.

பெண்கள் அணியில் யார் எப்படி என சரியாக சொல்லிக் கொண்டிருந்தார். அதேபோல் ஜாக்குலின், சௌந்தர்யா தான் டார்கெட் என்பதை சொல்லி ஆண்களையும் தூண்டி விட்டார். பிறகு இடமாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆண்கள் அணியில் இருந்து தீபக் எதிரணிக்கு போவதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வழக்கம் போல பெண்கள் அணி பெரும் விவாதமே நடத்திக் கொண்டிருந்தனர். இறுதியில் தர்ஷாவை போனா போகுது என செலக்ட் செய்து அனுப்ப முடிவு செய்தனர். இதில் தீபக் பெண்கள் அணிக்கு வரும்போது இனிமே உன் பேரு தீபிகா என்று அவர்கள் கத்தியது எல்லாம் ரொம்பவே ஓவர்.

அதை அடுத்து இந்த வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இறுதி வரை சத்யா பவித்ரா இருவரும் போட்டியிட்டனர். இதில் சத்யா வெற்றி பெற்று இந்த வார கேப்டன் பதவியை சொந்தமாக்கி கொண்டார்.

அன்சிதாவின் ஒரிஜினல் முகம் இதுவா.?

இதில் சரியாக விளையாடவில்லையே என பெண்கள் அணியில் மாற்றி மாற்றி குறை சொல்லி ஒரு பக்கம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அதை தொடர்ந்து தீபக் அன்சிதா பேசிக் கொண்டிருக்கும்போது முத்து அங்கு வந்ததும் ஒரு சண்டை ஆரம்பித்தது.

திடீரென சாமி வந்தது போல் அன்சிதா எனக்கு உன்கிட்ட பேச வேண்டாம் என ரிப்பீட் மோடில் சொல்லி கத்தியது எல்லாம் ஓவர். நிச்சயம் விஜய் சேதுபதியிடம் இதற்காக அவர் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அந்த இடத்தில் முத்துக்குமரன் அமைதியாக ஹேண்டில் செய்தது பாராட்டுக்குரியது.

அதன் பிறகு நாமினேஷன் நடைபெற்றது. இதில் மொத்தமாக பத்து போட்டியாளர்கள் சிக்கினார்கள். பின்னர் ஷாப்பிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் ஜெர்க்கின் போட்டுக் கொண்ட அதன் மேல் பசையை தடவி உருள வேண்டும்.

அதன் மூலம் அங்கு இருக்கும் பணத்தை அவர்கள் கலெக்ட் செய்து ஷாப்பிங் செய்யலாம். இதில் ரிகர்சல் பார்க்கிறேன் என்ற பெயரில் சாச்சனா பாத்ரூமில் உருண்டதெல்லாம் வேற லெவல் காமெடி.

இந்த உருட்டு டாஸ்க் மூலம் ஆண்கள் 8700 பெண்கள் 7200 சம்பாதித்தனர். அதை வைத்து கடகடவென பொருட்களை எடுத்து ஷாப்பிங்கை ஒரு வழியாக முடித்தார்கள். இப்படியாக நேற்றைய நாள் சண்டை குதூகலம் என நகர்ந்தது.

Trending News