வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நாங்க பிரபலமாக்குறோம் என கூப்பிட்ட விஜய் டிவி.. அட்ரஸ் கூட தெரியாமல் காணாமல் போன 5 செலிபிரிட்டி

Vijay Tv Celebrities: திறமைகளை வெளிகாட்டும் விதமாக நிகழ்ச்சிகளை மேற்கொண்டு அதில் ஏற்படும் ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி டிஆர்பிக்காக செயல்படும் சேனல்கள் ஏராளம். அவ்வாறு வாய்ப்பு தேடி வந்தவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என கூறி அவர்களை காணாமல் ஆக்கி விடுவதே வேலையாக வைத்திருக்கின்றனர்.

இது போன்ற விஷயங்களில் நம்பர் ஒன்றில் இருக்கும் சேனல் தான் விஜய் டிவி. பிக் பாஸ், குக் வித் கோமாளி, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் பங்கு பெற்று, பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பை மேற்கொண்டு வரும் 5 பிரபலங்களைப் பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் 5 படங்கள்.. தியேட்டரில் சோடை போனதால் ஒரே மாதத்தில் வந்த பிச்சைக்காரன் 2

ஜி பி முத்து: எளிமையான வாழ்க்கையை வாழ்பவர் ஆயினும் தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி புரியும் மனசு கொண்டவர் ஜி பி முத்து. இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்பாளராக களம் இறங்கினார். இவரின் தன்மைக்கு அங்கு ஒத்துப் போகாததால் குறுகிய நாட்களிலேயே வெளியேறினார். அதை தொடர்ந்து சில பட வாய்ப்புகள் வந்தது. இருப்பினும் தற்பொழுது தன் யூடியூப் சேனலில் செய்தி வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ரம்யா பாண்டியன்: தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பின் குக் வித் கோமாளி மேலும் பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன் பின் பட வாய்ப்பு கிடைக்கும் என்று இவர் மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக சில கிளாமர் ரோலில் நடித்தார். இருப்பினும் இவர் தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: குணசேகரனுக்கு எதிராக மொத்த வித்தையும் இறக்கும் விசாலாட்சி.. வாயடைத்து நிற்கும் ஜான்சி ராணி

மீரா மிதுன்: சர்ச்சை என்றாலே இவர் பெயரை சொல்லலாம் அந்த அளவிற்கு வீடியோக்கள் மூலமும், செய்திகள் மூலமும் யூ ட்யூப் சேனலில் பிரபலமாக பேசப்பட்டவர். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து இருக்கிறார். அதன் பின் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்ற இவர் அங்குள்ள ஆண் பங்கேற்பாளரால் தனக்கு பிரச்சினை வருவதாக கூறி சர்ச்சைக்கு ஆளானார். இது போன்ற சர்ச்சையில் சிக்கி ஜெயிலுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலி: ஜல்லிக்கட்டு விஷயத்தில் பெருதளவு பேசப்பட்ட ஜூலி விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஓவியாவிடம் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பின் காணாமல் போன இவர் மன்னர் வகையறா என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தற்போது விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து வருகிறார்.

Also Read: சினிமாவிலும் ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு.. பதற வைக்கும் பேட்டியை அளித்த பிரியா பவானி

பாவனி ரெட்டி: இவர் தெலுங்கு, தமிழ் படங்களில் துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சமீபத்தில் துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இவர் விஜய் டிவியில் சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடித்து அதன் பின் பிக் பாஸ் சீசன் 5 வில் பங்கேற்றார் அதைத் தொடர்ந்தே துணிவு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

Trending News