வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சஞ்சீவ்-ஆலியாவை தொடர்ந்து ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்.. யாருக்கும் தெரியாமல் நடந்த நிச்சயதார்த்தம்

வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரை நடிகர் நடிகைகளும் ஜோடி சேர்ந்து நட்சத்திர தம்பதியர்கள் ஆக மாறுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடி சஞ்சீவ்-ஆலியா மானசா, அந்த சீரியலுக்கு பிறகு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில், கதாநாயகியை விட வில்லி தான் நன்றாக நடிக்கிறார் என்ற பெயரை வாங்கிய அர்ச்சனாவுக்கும், பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடிக்கும் நடிகர் அருண்பிரசாத்திற்க்கும் திருமணம் ஆகப் போகிறது என சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சைலண்டாக தங்களது நிச்சயதார்த்தத்தை நடத்தியிருக்கின்றனர். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகின்றனர். இதை அருண்பிரசாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார். ‘அருண் பிரசாத்-விஜே அர்ச்சனா இருவருக்கும் கல்யாணம்.

டாக்டர் பாரதிக்கு டும் டும் டும் என்ற வார்த்தைகள் அடங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டு, அதன் கீழே அருண்பிரசாத்-விஜே அர்ச்சனா காதல் திருமணம் 200% கன்ஃபார்ம்டு(comfirmed) என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் சிலர், சீரியலில் சைலன்ட் ஆக இருக்கும் அருண்பிரசாத்திற்க்கும், ராஜா ராணி2 சீரியலில் அடாவடி செய்யும் அர்ச்சனாவிற்கும் எப்படி செட் ஆகும் என்றும் புலம்புகின்றனர். இருப்பினும் சீரியல் வேறு, நிஜ வாழ்க்கை வேறு அல்லவா! ஆகையால் இந்த காதலர்கள் திருமண வாழ்க்கையில் இணை போகிறார்கள் என்பதை அறிந்ததும் சின்னத்திரை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

டிஆர்பி-யில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாக சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினி, சீரியலில் இருந்து விலகிய பிறகு டல்லடிக்க துவங்கிவிட்டது. இதே நிலைமை தான் அர்ச்சனா நடிக்கும் ராஜா ராணிm 2 சீரியலுக்கும் வந்திருக்கிறது.

இதிலும் பிரசவத்திற்காக சென்ற ஆலியா மானசா அதன்பிறகு சீரியலுக்கு திரும்பவே இல்லை. அவருக்கு பதில் ரியா, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராஜா ராணி 2 சீரியலும் ஆலியா சென்ற பின்பு ரசிகர்களிடம் இந்த சீரியலுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

Trending News