புதன்கிழமை, நவம்பர் 20, 2024

Vijay Tv: போதையில் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்த விஜய் டிவி பிரபலம்.. கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்

Vijay Tv Celebrities: விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் முகத்தை காட்டி விட்டாலே அவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துவிடும். ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவி மூலமாக வந்த அனைவரும் பேமஸ் ஆகி இருக்கிறார்கள். அப்படி விஜய் டிவியில் பிரபலமாக ஜொலித்த ஒருவர் கண்ணுமுன்னு தெரியாமல் குடித்து வந்ததால் போதையில் கெட்ட வார்த்தைகளை பேசி பிரச்சனை பண்ணி இருக்கிறார்.

அதனால் தற்போது அவரை போலீஸ் தட்டி தூக்கி கூண்டில் அடைத்து விட்டார்கள். அவர் வேறு யாருமில்லை நாட்டுப்புற பாடலுக்கு சொந்தக்காரராக ஜொலித்து வந்த பின்னணி பாடகர் வேல்முருகன். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மற்றும் ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற பாடல்களை பாடி மிகவும் பிரபலமான ஒரு பின்னணி பாடகர்.

உதவி மேலாளருக்கு கொடுத்த டார்ச்சர்

இதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் கத்திரி பூவழகி என்ற பாடலையும் இவர்தான் பாடியிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இதனை அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று விஜய் டிவியின் பிரபலமாக ஜொலித்து வந்தார். அப்படிப்பட்டவர் நேற்று இரவு மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் கைது ஆகியிருக்கிறார். சென்னை விருகம்பாக்கம் பக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் வேல்முருகன் காரில் விருகம்பாக்கத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக நேற்று முன்தினம் சென்றிருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் சந்திப்பு அருகே சென்றபோது அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு தடுப்பு போடப்பட்டு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்திருக்கிறது.

அப்பொழுது பேரிகார்டை விலக்கி விட்டு அந்த வழியாக செல்ல வேல்முருகன் முயற்சி எடுத்து இருக்கிறார். இதனை அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு என்பவர் வேல்முருகனின் செயலை கண்டித்து இருக்கிறார். அத்துடன் இந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லக் கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய் தகராறாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த வேல்முருகன், வடிவேலை தாக்கி விட்டு அங்கு போடப்பட்டிருந்த தடையை மீறி அந்த வழியாக காரில் சென்றிருக்கிறார். இதனால் தாக்குதலில் காயம் அடைந்த வடிவேலு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

தற்போது இது குறித்து விருகம்பாக்கம் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் போலீஸார் விசாரணை பெயரில் வேல் முருகனை கைது பண்ணி விசாரித்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது விசாரணை முடிந்த நிலையில் ஜாமினில் வேல்முருகன் வெளிவந்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News