சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

3 முக்கியமான சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி.. பிக் பாஸ் நிகழ்ச்சியால் எடுத்த அதிரடி முடிவு

Vijay Tv Serial Time Changed: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ நிகழ்ச்சிகளில், சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து விட்டது. அதில் வித்தியாசமான கதையுடன், ஜோடிகளை வைத்து மக்களை கவரக்கூடிய வகையில் ஒவ்வொரு நாடகமும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவி சேனலும் போட்டி போட்டு வருகிறது.

இதில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் என்று டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்தாலும், மற்ற சீரியல்களும் மக்களுக்கு ஃபேவரிட் ஆக வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி, ரொமான்ஸ் மக்களை கவர்ந்ததால் இந்த நாடகத்திற்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்

அதனால் இவர்களுடைய ஜோடியை பார்ப்பதற்கு என்று காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி என்னவென்றால் இந்த நாடகத்தின் சீரியல் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த மகாநதி சீரியல் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி முதல் 6.30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது.

இதே மாதிரி தமிழ் மற்றும் சேதுவின் கல்யாண வாழ்க்கை தற்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்யும் விதமாக தமிழ் அப்பா பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழ் தன்னுடைய மாமனாரின் வெற்றிக்காக போராடும் விதமாக தற்போது கதை நகர்ந்து வருகிறது. இந்த சூழலில் சின்ன மருமகள் நாடகத்தின் நேரம் இனி 7:00 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து அபி மற்றும் ராகவாவின் காதல் கதையை கொண்டு வரும் நீ நான் காதல் என்ற சீரியல் இனி அக்டோபர் ஏழாம் தேதி முதல் மாலை 6 மணிக்கு நேரத்தை மாற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் இனி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பு ஆகப்போகிறது. ஏனென்றால் அக்டோபர் 7ம் தேதி முதல் இரவு 9:30 மணிக்கு பிக் பாஸ் சீசன்8 நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் சீரியலின் நேரத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

Trending News