Serial: சீரியல்கள் தான் மக்களின் பொழுதுபோக்கு என்பதால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு புது புது சீரியல்களை இறக்கி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி சமீபத்தில் இரண்டு மூன்று சீரியல்களை புதுசாக கொண்டு வந்தார்கள். ஆனாலும் இன்னும் வரிசையில் ஏகப்பட்ட சீரியல் காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக ஐந்து சீரியல்கள் வரப்போகிறது என்று ஏற்கனவே பார்த்திருந்தோம். அதில் சிந்து பைரவி, தனம் மற்றும் அய்யனார் துணை சீரியல்கள் வந்துவிட்டது. மீதம் இருப்பது பூங்காற்று திரும்புமா மற்றும் இரவும் பகலும் என்ற சீரியல்.
இதில் இரவும் பகலும் சீரியலில் நடிக்கப் போகும் ஆர்டிஸ்டிகளின் விவரங்கள் எதுவும் வெளிவராமல் ரகசியமாக சூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆனால் பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் முத்தழகு சீரியலில் நடித்த நடிகை ஷோபனா கமிட்டாகி இருந்தார். இதற்கான முதல் கட்ட சூட்டிங் கிராமத்தில் நடைபெற்ற போஸ்ட்கள் அனைத்தும் இணையத்தில் வெளியானது. ஆனால் தற்போது ஷோபனா கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகும் இன்னொரு புது சீரியலில் டைட்டில் ஹீரோயினாக கமிட் ஆகி விட்டார்.
இதனால் விஜய் டிவியில் முதல் சூட்டிங் முடித்த பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் பற்றிய அப்டேட்டுகள் பற்றி அதில் நடித்த ஆர்டிஸ்ட்கள் கூறிய பதில் என்னவென்றால் முதல் சூட்டிங் பிறகு இப்பொழுது வரை யாருமே கூப்பிடவும் இல்லை அதை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. அதனால் இப்போதைக்கு அந்த சீரியலை கேன்சல் பண்ணியதாக தற்போது தகவல் வெளிவந்திருக்கிறது.
ஒருவேளை ஏற்கனவே மூன்று சீரியல்கள் புதுசாக வந்த நிலையில் இந்த சீரியலுக்கு டைம் பிரச்சினை இருப்பதால் இப்போதைக்கு பிரேக் எடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இனி இந்த சீரியலில் முத்தழகு சீரியலில் நடித்த ஷோபனா நடிக்க வாய்ப்பு இல்லை. இதனைத் தொடர்ந்து இரவும் பகலும் சீரியலும் தற்போது வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது.