வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூரிய வம்சம் சின்ராஸாக மாறும் சேது.. நிறைவேற போகும் சின்ன மருமகளின் டாக்டர் கனவு

Chinna Marumagal: விஜய் டிவி இப்போது புதுப்புது சீரியல்களை களமிறக்கி கொண்டிருக்கிறது. அதில் சின்ன மருமகள் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் சேதுவின் மனைவியான பிறகு சமையல் கட்டே கதி என இருக்கிறார். இந்த சூழலில் அவருடைய டாக்டர் கனவு பற்றி சேதுவிற்கு தெரிய வந்துள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேது தமிழ் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவர் திடீரென மயக்கம் போட்டு ரோட்டில் விழுந்து விடுகிறார்.

உடனே தமிழ் அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். இதைப்பற்றி சேது விசாரிக்க பள்ளிக்கூடத்தில் எனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு லட்சியம் என தமிழ் கண்ணில் ஆசை மின்ன கூறுகிறார். அதைத்தொடர்ந்து ஸ்கூலிலும் தமிழ் தொடர்ந்து படிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

தமிழின் டாக்டர் கனவு

இதனால் சேத்தூர் பெரும் யோசனையுடன் இருக்கிறார். இப்படியாக ஒரு ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது. அப்புறம் என்ன நட்சத்திர ஜன்னலில் என சேது சூரியவம்சம் சின்ராஸ் ஆக மாறுவதுதான் பாக்கி.

எப்படியும் மனைவி மேல் இருக்கும் தீராத காதலில் அவருடைய லட்சியத்திற்கு இவர் உதவ தான் போகிறார். இதனால் வீட்டில் சில எதிர்ப்புகள் கிளம்பும்.

அதை எல்லாம் தாண்டி தமிழ் தன் கனவில் எப்படி ஜெயிக்கப் போகிறார் என்பதுதான் அடுத்தடுத்த எபிசோடுகளாக இருக்கும். இதை இப்போதே கணித்து வரும் ரசிகர்கள் சீரியலை இப்படியே விறுவிறுப்பாக கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்திய சீரியல் செய்திகள்

Trending News