செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Chinna Marumagal: கொஞ்சம் கொஞ்சமாக சேது பக்கம் சாய்ந்த தமிழ்.. அப்ப டாக்டர் படிப்பு அவ்வளவு தானா

Chinna Marumagal: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சின்ன மருமகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அதிலும் சமீப காலமாக சேது, தமிழ் இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேது அட இப்படி ஒரு மாப்பிள்ளை நமக்கு இல்லையே என ஏங்க வைத்துள்ளார். அதாவது அவர் தமிழுடன் மாமியார் வீட்டுக்கு மறு வீடு வந்துள்ளார்.

அங்கு அவர் செய்யும் விஷயங்கள் ஒவ்வொன்றும் எல்லோரையும் இம்ப்ரஸ் செய்திருக்கிறது. அதிலும் முக்கியமாக தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக புருஷன் பக்கம் சாய ஆரம்பித்துள்ளார்.

சேது பக்கம் சாய்ந்த தமிழ்

அதில் மாமியார் வீட்டில் மோட்டார் வேலை செய்யவில்லை என சேது குடத்தில் தண்ணீர் கொண்டு வருகிறார். இதை பார்த்த மாமியார் பதறி போகிறார்.

வசதியான வீட்டுப் பிள்ளையை நாங்க வேலை வாங்குறோம்னு சொல்லுவாங்க என தவிக்கிறார். அதற்கு சேது இப்ப நான் உங்க வீட்டு மாப்பிள்ளை என ஒரே போடாக போடுகிறார்.

இதைப் பார்த்து மயங்கி போன தமிழ் சேதுவை காதல் பார்வை பார்க்கிறார். இப்படியாக கலக்கல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இது ரசிக்கும் படி இருந்தாலும் டாக்டருக்கு படிக்க வேண்டிய பிள்ளை இப்போது காதல் பாடம் படிக்குது என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

ஆனாலும் இந்த ஜோடி பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கின்றனர். அதனாலயே இந்த சீரியல் தற்போது அதிக பட்ச பார்வையாளர்களை கொண்டிருக்கிறது.

Trending News