ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சினிமாவை காப்பியடிக்கும் விஜய் டிவி.. கேப்ரில்லாவின் ஐபிஎஸ் கனவு புஷ்சுன்னு போச்சே!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே2 சீரியலில் பார்த்திபன் தன்னுடைய மனைவி காவியா மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என படாதபாடு படுகிறான். இதற்காக காவியாவிற்கு தெரியாமலேயே அவள் ஐபிஎஸ் தேர்வு எழுதுவதற்காக வெளியூர் செல்லும்போது அவளுடனேயே அவள் செல்லும் பேருந்தில் செல்கிறான்.

இடையில் பஸ் பாதி வழியிலேயே நின்றுவிட, பஸ்ஸில் இருந்து இறங்கும் காவியா அந்த இடத்தில் நிகழும் கலவரத்தால் கலக்கம் அடைகிறாள். அதில் ஒருவர் மற்றவரை அடித்துக்கொண்டு ரத்தக் காடாக இருப்பதை பார்த்து பயந்த காவியாவிற்கு திடீரென்று பார்த்திபன் அவள் முன்பு நின்றவுடன் சந்தோஷப்படுகிறாள்.

பார்த்திபன் காவியாவை அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறான். அன்றைக்கு காவியாவிற்கு பரிச்சயம் என்பதால் அந்த தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என அடம் பிடிக்கிறாள். ஆனால் பரிசை எழுதுவதற்கான ஹால்டிக்கெட், ஐடி ப்ரூப் எல்லாமே இந்தக் கலவரம் நடந்த இடத்தில் நிற்கும் பேருந்தில் இருப்பதால் அதை எடுத்தே ஆகவேண்டும் என பார்த்திபனிடம் கெஞ்சுகிறாள்.

பார்த்திபன் கில்லி படத்தில் விஜய் எப்படி ஜீப்பில் திரிஷாவை கெத்தாக கூட்டிக் கொண்டு சென்றது போல், பார்த்திபனும் காவியாவை கலவரம் நிகழும் அந்த இடத்திற்கு கூட்டிக்கொண்டு செல்கிறார். இடையில் கலவரக்காரர்கள் கலவரம் நடக்கும் போது எங்கே செல்கிறீர்கள் என வழிமறித்து சண்டை போடுகின்றனர்.

அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த பார்த்திபன், பேருந்தில் இருக்கும் காவியாவின் உடமையை பத்திரமாக எடுத்து வந்து, அதன் பிறகு காவியாவை பரிச்சை எழுத வைக்கிறான். இதன் பிறகு காவியாவிற்கு பார்த்திபன் மீது இனம்புரியாத நட்பு ஏற்பட்டு அவர்களிடையே காதல் மலர வாய்ப்பு உருவாகும்.

மறுபுறம் காவியா காதலித்த ஜீவா, காவியாவின் அக்கா பிரியாவுடன் சேர்ந்து வாழ துவங்கியதால் காவியாவும் தன்னுடைய வாழ்க்கையில் பார்த்திபனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முயற்சிப்பாள். மேலும் கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியில் சினிமா படங்களை அப்படியே காப்பி அடிக்கின்றனர் என மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே2 போன்ற சீரியல்களை பார்க்கும் ரசிகர்கள் விஜய்டிவியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Trending News