திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தீபக் வெளிய விஷால் உள்ள.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்

Biggboss8-Deepak: நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் செம கோபத்திலும் அப்செட்டிலும் இருக்கின்றனர். ஏனென்றால் கடுமையான போட்டியாளராகவும் நியாயமானவராகவும் இருந்த தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பைனல்ஸ் வரை வருவார் என நினைத்த இவரின் வெளியேற்றம் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய் டிவி இப்படி ஒரு வேலையை பார்த்ததற்கான காரணமும் தெரியவந்துள்ளது.

ஏனென்றால் ஆரம்பத்தில் ஓட்டு எண்ணி கையில் தீபக் முன்னிலையில் தான் இருந்தார். ஆனால் அதன் பிறகு அவருடைய ஓட்டுக்கள் குறைய ஆரம்பித்தது.

இதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி விஷாலை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்துவிட்டது. அதனாலயே தீபக் இப்போது பலிகடாவாகி இருக்கிறார்.

டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்

ஏனென்றால் இந்த வாரம் பழைய போட்டியாளரான தர்ஷிகா வீட்டுக்குள் வருகிறார். அவருக்கும் விஷாலுக்கும் நேரடியான மோதலை காண ரசிகர்கள் கூட ஆவலாக தான் இருக்கின்றனர்.

அதை வைத்து ஏகப்பட்ட கன்டன்ட்டை பார்க்க பிக் பாஸ் டீமும் ஆவலுடன் இருக்கிறது. அதே நேரம் விஜய் டிவியின் டிஆர்பியும் இதனால் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதன் காரணமாகத்தான் தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது தர்ஷிகா வீட்டுக்குள் வந்து விட்டார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால் வந்தவர் ரவீந்தருடன் சண்டை கட்டிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விஷால் இந்த பிரச்சனையில் எப்படி சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

Trending News