ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

திறமை முக்கியமில்லை, டிஆர்பி தான் முக்கியம்.. விஜய் டிவி என் வாழ்க்கையே அழிச்சுட்டாங்க புலம்பும் பிரபலம்

DJ Black – Pooja: சின்னத்திரை சேனல்களை பொருத்தவரைக்கும் கடந்த பத்து வருடங்களாக டிஆர்பி என்பது அவர்களின் மாய மந்திரமாக இருக்கிறது. டிஆர்பியை ஏற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில்தான் தற்போது நிறைய சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஊடகமாக இது இருக்கிறது என்பதை கூட மறந்துவிட்டு சில நேரங்களில் இந்த சேனல்கள் செய்யும் அட்டூழியங்கள் அளவுக்கு அதிகமாகிப் போய் விடுகிறது.

ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள், கண்டன்டுகளை மாற்றி மாற்றி தங்களுக்கு ஏற்றவாறு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன சின்னத்திரை சேனல்கள். இப்படி அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் இசைப்போட்டி. 20 வருடங்களுக்கு முன்பு சப்தஸ்வரங்கள், பாட்டுக்கு பாட்டு என சத்தமே இல்லாமல் சென்று கொண்டிருந்த இந்த இசைப்போட்டி, விஜய் டிவி களத்தில் இறங்கிய பொழுது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

Also Read:அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

பிரபல தொலைபேசி நிறுவனம் தொகுத்து வழங்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் கண்டிப்பாக சினிமாவில் பாடி விடலாம் என்று நிறைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனவுடன் உள்ளே நுழைகிறார்கள். அதேபோன்று பலருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இது இசை நிகழ்ச்சி போலவே இல்லை என்று பொதுமக்களே இந்த நிகழ்ச்சியை வெறுக்க தொடங்கி விட்டனர்.

முன்பெல்லாம் இசை போட்டி என்றால் போட்டியாளர்களால் பாடல்கள் மட்டுமே பாடப்படும். ஆனால் தற்பொழுது அதை தவிர மற்ற எல்லாமே இந்த நிகழ்ச்சியில் நடக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல வருடங்களாக குரல் பயிற்சியாளராக இருந்த அனந்த் வைத்தியநாதன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் ரொம்பவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Also Read:விறுவிறுப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 ஆடிஷன்.. யாரு கலந்துக்குறாங்க, எப்ப துவங்கப்படுகிறது தெரியுமா.?

அவர் பேசியதில் வெறும் பாட்டு போட்டி, திறமை என பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி ஏறாது. எனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நிகழ்ச்சியின் இயக்குனர்கள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு அழுத்தம் தரப்படுவதால் அவர்கள் கண்டன்டுகளுக்காக நிறைய விஷயங்களை செய்கிறார்கள். மேலும் ரசிகர்களால் கவனத்தை ஈர்க்கும் போட்டியாளர்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் இருந்தால் தான் மக்களும் விரும்பி பார்க்கிறார்கள். அதனால் தான் சேனல் இதை செய்கிறது என்று உண்மையை சொல்லி இருக்கிறார்.

ஒரு இசை பயிற்சியாளராக இருக்கும் என்னிடம் பாட்டு கற்றுக்கொள்ள வர வேண்டும் என்று நினைப்பவர்களை விட, இவரது பள்ளியில் சேர்ந்தால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்து வருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதனாலேயே இசைப் பள்ளியை எடுத்து நடத்த எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என்னுடைய கேரியர் இப்படி சந்தேகத்திற்கு உள்ளாகி விட்டது என்று அனந்த் வைத்தியநாதன் புலம்பி இருக்கிறார்.

Also Read:லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு சம்மதித்த அம்மா.. திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் வாழும் பிக்பாஸ் ஜோடி

- Advertisement -spot_img

Trending News