ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரவீந்தர் கையில் செருப்பை கொடுத்த விஜய் டிவி.. ட்ரெண்டிங் ஜோடியை கூப்பிட்டு கேவலப்படுத்திய சம்பவம்

ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களை நெருங்க உள்ள நிலையில் இப்போதுமே ட்ரெண்டிங்கில் உள்ளார்கள். இணையத்தில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்த இவர்களது திருமணத்தால் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் இவர்களை பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியும் டிஆர்பிக்காக இந்த ஜோடியை பேட்டி எடுக்க தனது சேனலுக்கு அழைத்துள்ளது. எப்போதுமே விஜய் தொலைக்காட்சி பற்றி வெளியில் ஒரு செய்தி போய்க் கொண்டிருக்கிறது. அதாவது இந்த தொலைக்காட்சியில் ஒரு தொடரில் ஜோடியாக நடித்தால் அவர்களே திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Also Read :  சுயரூபத்தை காட்டும் ரவீந்தர்.. கல்யாணத்துக்கு பின் சுயநலமாய் மகாலட்சுமிக்கு வைத்த ஆப்பு

அதன்படியே சரவணன் மீனாட்சியில் நடித்த செந்தில்-ஸ்ரீஜா, ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ்- ஆலியா மானசா போன்ற பல ஜோடிகள் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி விரைவில் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஊடகங்களில் விமர்சனம் செய்பவர் தயாரிப்பாளர் ரவீந்தர். அதுமட்டுமின்றி வனிதாவின் சொந்த பிரச்சனைகள் தலையிட்ட பல சிக்கலை ஏற்படுத்தியிருந்தர். ஆனால் வனிதாவுக்கு ஆதரவாக விஜய் டிவி தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை கொடுத்து வந்தது.

Also Read : ரவீந்தர்- மகாலட்சுமியின் அநாகரீக பேட்டி.. கோபத்தில் கொந்தளித்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பிரபலம்

ஆனால் தற்போது ரவீந்தர் ட்ரெண்டிங்கில் உள்ளதால் அவரை டிஆர்பிக்காக அழைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு டாஸ்க் என்று கூறி கூப்பிட்ட அவமானப்படுத்தி உள்ளனர். அதாவது ஒருவரைப் பற்றி ஒருவர் எவ்வாறு புரிந்து இருக்கிறார்கள் என்பது தான் அந்த டாஸ்க். இதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல் அமர்ந்திருக்க வேண்டும்.

மேலும் ஒரே பதிலை இருவரும் சொன்னால் அவர்களுக்கு மார்க் கொடுக்கப்படும். இதற்காக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கையில் ஆண் மற்றும் பெண் செருப்பு கொடுக்கப்படுகிறது. அந்தக் கேள்விக்கு பதில் மகாலட்சுமி என்றால் பெண் செருப்பை காட்ட வேண்டும், அதுவே ரவீந்தர் என்றால் ஆண் செருப்பை காட்ட வேண்டும்.

Ravinder-Mahalakshmi

இவ்வாறு ஒரு பிரபல தயாரிப்பாளரை கையில் செருப்பை கொடுத்த விஜய் டிவி கேவலப்படுத்தி உள்ளது. அதையும் கூட பொருட்படுத்தாமல் ரவீந்தர் அந்த டாஸ்க் விளையாடியது தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. விஜய் டிவி வனிதாவுக்கு சாதகமாக ரவீந்தரை கூப்பிட்டு இவ்வாறு அவமானப்படுத்தி உள்ளதாக பலரும் கூறிவருகிறார்கள்.

Also Read : அத கொண்டு வரலைன்னா மாமியார் கொடுமை கன்ஃபார்ம்.. மகாலட்சுமிக்கு செக் வைத்த ரவீந்தர்

Trending News