புதன்கிழமை, ஜனவரி 15, 2025

CWC5: TTF வாசனை நம்பியிருக்கும் குக் வித் கோமாளி 5.. இது என்ன டா விஜய் டிவிக்கு வந்த சோதனை

CWC5: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சன் டிவி என்ற ஒன்று இருப்பதே மறந்துவிட்டு, மக்கள் மொத்தமாக விஜய் டிவியை பார்க்கத் தொடங்கினார்கள். விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள், விஜய் டிவி சீரியல்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், அது இது எது, கலக்கப்போவது யாரு என எல்லா நிகழ்ச்சிகளும் விஜய் டிவிக்கு கை கொடுத்தது. ஆனால் சமீப காலமாக மத்த டிவிகள் இந்த போட்டியில் கொஞ்சம் முன்னேற தொடங்கி விட்டன.

அதிலும் சன் டிவி விஜய் டிவியை முறியடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி சன் டிவி சீரியல்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வர ஆரம்பித்திருக்கிறது.

அதே நேரத்தில் விஜய் டிவி சீரியல்களுக்கு அதிக அளவில் வரவேற்பை இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ளதான் வேண்டும். பாக்கியலட்சுமி, சிறகடிக்கும் ஆசை போன்ற சீரியல்கள் தான் இப்போதைக்கு விஜய் டிவியை காப்பாற்றி வருகிறது.

இப்போதைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் டிஆர்பிஐ மீண்டும் மேலே ஏற்றுவதில் விஜய் டிவி ஆர்வமாக இருக்கிறது. சன் டிவியில் டாப் குக், டூப் குக் என்ற பெயரில் அதே கான்சப்டோடு நிகழ்ச்சி ஒன்று ஆரம்பமாக இருக்கிறது.

எப்படியாவது இந்த போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் விஜய் டிவிக்கு இருக்க தான் செய்கிறது. அதற்காக இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 டிடிஎஃப் வாசனை நம்பி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மை இதுதான். இந்த செய்தியை பார்க்கும் பலருக்கு யார் அந்த டிடிஎஃப் வாசன் என சந்தேகம் வரலாம். 2கே கிட்ஸ் இன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த வாசன்.

பைக் யூடியூபில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அத்தனை பேரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான். இவர் பண்ணியாக்க போரில் அவருடைய லைசன்ஸ் ரத்து செய்ய கோர்ட் உத்தரவிட்டது. குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனுக்கும், வாசனுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம்.

செலிபிரிட்டிகளை கூப்பிட்டு குக்காக மாற்றும் இந்த ஷோவில் டிடிஎஃப் வாசனின் காதலியும் கலந்து கொண்டிருக்கிறார். மலையாள தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசிய ஷாலின் ஜோயா என்பவர் தான் வாசனின் காதலி.

இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரவர் சமூக வலைத்தள பக்கங்களிலேயே அதிகமாக இருக்கிறது. ஷாலின் பங்கேற்று இருப்பதால் டிடிஎஃப் வாசனின் விழுதுகள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்பது விஜய் டிவியின் பிளான். வாசன் ஏதாவது ஒரு எபிசோடில் விருந்தினராக உள்ளே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Trending News