திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டிஆர்பி இல்லாததால் சீரியலில் இருந்து விலகும் விஜய் டிவி கதாநாயகன்.. இவருக்கு பதில் இவரா!

Vijay TV Serial:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் என்டர்டைன்மென்ட் ஷோ-விற்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். ஆனால் தற்போது டிஆர்பி-யில் டல் அடித்துக் கொண்டிருக்கும் சீரியலை விரைவில் முடித்து விட திட்டமிட்டனர். ஆனால் இப்போது அதிரடியாக அந்த சீரியலின் கதாநாயகன் விலகுவதாகவும் அது அவருக்கு பதில் வேறொரு நடிகர் இணைய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஜய் டிவியில் துவங்கப்பட்ட சீரியல்தான் கண்ணே கலைமானே. இதில் பானு என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பட வாய்ப்பு தேடி கதாநாயகன் ராம் சென்னை கிளம்புகிறார். சென்னை சென்ற பின் அவர் விபத்தில் சிக்கி தன்னுடைய ஞாபகங்களை இழக்கிறார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸை அம்போவென விட்ட மருமகள்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ்

இவரை மாதுரி என்கின்ற இன்னொரு பெண் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இப்படி சந்தர்ப்ப சூழ்நிலையினால் ராம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளும் கொண்ட கண்ணே கலைமானே சீரியலில் கதாநாயகனாக ராம் கேரக்டரில் நடிக்கும் நந்தா திடீரென்று சீரியலில் இருந்து வெளியேற உள்ளார்.

இவருக்கு பதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பியாக நடிக்கும் நவீன் வெற்றி இனிமேல் கண்ணே கலைமானே சீரியலில் ராம் என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் கண்ணே கலைமானே சீரியலில் ராம் என்ற கேரக்டரில் நவீன் வெற்றி தான் நடிக்கப் போகிறார்.

Also Read: கோபியை தோற்கடிக்க துணிஞ்சு களத்தில் இறங்கிய பாக்கியா.. துணிந்தவர்க்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தையாம்

இருப்பினும் ராம் கேரக்டரில் நந்தாவை பார்த்த ரசிகர்களுக்கு நவீனை திடீரென்று நந்தாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. பார்க்க பார்க்க பழகிடும் என்பது போல் அடுத்தடுத்த நாட்களில் நந்தாவாக நவீனை பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படியே காலப்போக்கில் பழகிவிடும்.

இருப்பினும் ஏற்கனவே டிஆர்பி-யில் பின்னடைவு சந்தித்துக் கொண்டிருக்கும் கண்ணே கலைமானே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த நடன இயக்குனர் நந்தா திடீரென்று விலகியது அந்த சீரியலுக்கு மேலும் மோசமான சூழ்நிலை உருவகப் போகிறது. விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஒளிபரப்பி சீரியலை ஊற்றி மூடப் போகின்றனர்.

Also Read: குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

Trending News