வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குடும்ப சீரியலில் அருவருப்பான காட்சியை காட்டி வரும் விஜய் டிவி.. மொத்தமாக சேனலை டேமேஜ் பண்ணிய சீரியல்

Vijay Tv Serial: சீரியலை பொருத்தவரை குடும்பத்துடன் சேர்ந்து இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு நாடகமாகும். அதனாலயே சீரியல்களில் மூலம் அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும். அத்துடன் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு புத்தம் புது சீரியல்களை வரிசையாக இறக்கி கொண்டே வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவி தான் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவி சீரியல்கள் கொஞ்சம் மக்களிடத்தில் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் கொஞ்சம் நாட்களாகவே விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் எல்லாம் எரிச்சல் ஊட்டும் விதமாகத்தான் அமைகிறது. அதிலும் பாக்கியலட்சுமி சீரியலில் கதை எதுவும் இல்லாமல் அரைத்து மாவை அரைத்துக் கொண்டு நாடகத்தை ஒட்டிக்கொண்டு வருகிறார்கள்.

இருந்தாலும் இது ஒரு இல்லத்தரசிகளின் நம்பிக்கை ஊட்டும் விதமாக கணவன் விட்டுட்டு போனாலும் எப்படி குடும்பத்தை தனியாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் விதமாக ஒரு சில காட்சிகள் இருப்பதால் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னொரு சீரியல் குடும்ப சீரியலாக சில மாதங்களுக்கு முன் தான் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த சீரியல் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பு பெற்றிருக்கிறது என்று தெரிந்ததும் அதனை இன்னும் அதிகரிக்க முயற்சி பண்ணாமல் அருவருப்பான காட்சியை விஜய் டிவி காட்டிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்த வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் பார்வதி மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

குடும்பங்கள் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழப்போன மருமகள் பார்வதி புகுந்த வீட்டுக்கு எந்தவித பிரச்சனையும் வரவிடாமல் தடுக்கும் விதமாக கேரக்டர் அமைந்து வருகிறது. அதே மாதிரி கல்யாண வாழ்க்கையில் ஏமாந்து போன பல்லவி அந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நல்லவர் மாதிரி வேஷம் போட்டு அந்த வீட்டில் மருமகளாக நுழைந்து இருக்கிறார்.

அடுத்ததாக அஞ்சலி, அஜயை காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் தற்போது புகுந்து வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டதால் கணவன் வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் நாத்தனார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அஞ்சலிக்கு ஒரு அசம்பாவிதமான செயலை காட்டிவிட்டு வருகிறார்கள். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சீரியலில் இப்படி ஒரு பொண்ணுக்கு அநீதி நடக்கும் விதமாக காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

இது ஒரு சீரியலா இல்லை குப்பை கதையா என்று மக்கள் கமெண்ட்ஸ் மூலம் திட்டிக்கொண்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தயவு செய்து இந்த சேனலில் சீரியலை போடுவது நிறுத்தி விடுங்கள். உங்கள் டிஆர்பிக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்று இப்படி ஒரு அசிங்கமான வேலையை பார்க்காதீர்கள். சீரியல் என்றாலே வீட்டில் இருந்து பார்க்கும் ஒரு தொடராக தான் இருக்க வேண்டும். இப்படி அருவருப்பான செயலைக் காட்டி உங்க சேனலை நீங்களே டேமேஜ் பண்ணி விட்டீர்கள் என்று கமெண்ட்ஸ் மூலம் கழுவி ஊத்துகிறார்கள்.

ஏற்கனவே விஜய் டிவி சேனல் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு விஷயத்திலும் தோற்றுப் போய் வருகிறது. குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடிவாங்கி விட்டது. அதை போல் கதையே இல்லாமல் பாக்கியலட்சுமி சீரியல் கடுப்பேற்றுகிறது. இப்பொழுது வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் அஞ்சலி கேரக்டரை டேமேஜ் பண்ணும் அளவிற்கு காட்சிகள் இருப்பது கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது.

Trending News