புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு வாரமா உசுரை வாங்கிய காற்றுக்கென்ன வேலி.. நடுரோட்டில் வெண்ணிலாவை கத்தி கதறவிட்ட விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் சூர்யா, அவரிடம் படிக்கும் வெண்ணிலாவை காதலிக்கிறார். சிறுவயதிலேயே சூர்யா அம்மாவை பிரிந்து, பெரியம்மா அரவணைப்பில் வளர்கிறார்.

அதேபோல் படிப்பிற்கு தடையாக இருக்கும் குடும்பத்தில் இருந்து ஓடிவந்து சூர்யாவின் அம்மாவின் உறுதுணையுடன் கல்லூரிப்படிப்பை வெண்ணிலா படித்துக் கொண்டிருக்கிறார். இன்னிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது.

Also Read: டிஆர்பி-யில் மல்லுக்கட்டும் சன், விஜய் டிவி!

சூர்யா ஏற்கனவே வெண்ணிலாவிடம் தனது காதலை சொல்லிவிட்டார். ஆனால் வெண்ணிலாவும் சூர்யாவை விரும்புவதை மறைத்துக்கொண்டு, இல்லை என சூர்யாவிடம் சொல்லிவிடுகிறார். ஏனென்றால் சூர்யாவின் பெரியம்மா மீனாட்சி மற்றும் தன்னுடைய தந்தை இருவருக்கும் பயந்து வெண்ணிலா தனது காதலை மறைத்துக் கொண்டார்.

ஆனால் சூர்யாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் வெண்ணிலாவை மறக்கமுடியாமல் 6 மாதம் அமர்நாத்துக்கு ஆன்மீக யாத்திரை செல்ல கிளம்புகிறார். அங்கு சென்றால் சிலர் திரும்ப வர நினைக்கமாட்டார்கள். ஆன்மிகத்தில் மூழ்கி விடுவார்களாம்.

Also Read: விஜய் டிவி குறிவைக்கும் பிரபலங்கள்!

இதை அறிந்த வெண்ணிலா சூர்யாவை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என செல்கிறார். அங்கு பஸ்ஸில் ஏறி சூர்யா செல்ல, ரோட்டில் கத்திக் கதறுகிறார் வெண்ணிலா. கடைசியில் வெண்ணிலாவின் கதறலை கேட்ட சூர்யா, பஸ்ஸிலிருந்து இறங்கி வெண்ணிலாவை நோக்கி வருகிறார். அந்த சமயம் வெண்ணிலா முதன்முதலாக தனது காதலை சூர்யாவிடம் சொல்கிறார்.

இதே போன்றுதான் விஜய்-சிம்ரன் நடிப்பில் வெளியான துள்ளாத மனம் துள்ளும் படத்தின் க்ளைமாக்ஸில் இருக்கும். மேலும் இதில் சிம்ரனை மிஞ்சிய வெண்ணிலாவின் நடிப்பு மிக தத்ரூபமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டுகின்றனர். இப்படி சினிமா ரேஞ்ச்க்கு காதல் காட்சிகள் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் காண்பித்து சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கின்றனர்.

Also Read: கமலை வைத்து விளம்பரம் தேடிய விஜய் டிவி!

Trending News