வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தரமான போட்டியாளரை இறக்கிய விஜய் டிவி.. பிக்பாஸிலும் துவங்கிய சக்களத்திச் சண்டை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த வாரம் துவங்கப்பட்டு ஒரு வாரத்தை நிறைவு செய்த நிலையில், இன்று புதிதாக ஒரு போட்டியாளர் பிக்பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக போகிறார்.

ஏற்கனவே ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம் ராமசாமி, ஜிபி முத்து, குயின்ஸி, விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன், தனலட்சுமி, விஜே மகேஸ்வரி, அமுதவாணன், விக்ரமன், ஜனனி, மாடல் நிவாஷினி, அசர் கோளார் என 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில் புதிதாக விஜய் டிவியின் சீரியல் பிரபலம் மைனா நந்தினி என்ட்ரி ஆகிறார்.

Also Read: பப்ளிசிட்டிக்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்னேன்.. உண்மையைப் போட்டு உடைத்த காதலி

இவர் முன்பே முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்திருக்க வேண்டும். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை மைனா நந்தினி இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் வெள்ளித்திரையிலும் சூரியின் மனைவியாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்து கலக்கியவர். அதேபோல் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கின்ற காமெடி ரோலில் நடித்து மைனா நந்தினி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

Also Read: சாண்டி மாஸ்டருடன் இணைந்த ஜிபி முத்து.. குத்தாட்டம் போட வைத்த வீடியோ

இவர் விஜய் டிவியின் ஆஸ்தான முகங்களில் ஒருவராக வலம் வரும் நிலையில் அவருடைய காமெடி கலந்த கலகலப்பான பேச்சால் பிக்பாஸ் மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் மைனா நந்தினி சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் இவரும் ஒருவராக நடித்திருந்தார்.

ஏற்கனவே 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்த விஜே மகேஸ்வரி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் இன்னொரு மனைவியுமான மைனா நந்தினியும் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சக்களத்தி சண்டையை காட்டப் போகிறார்.

Also Read: ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து

Trending News