செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்

Actor Vijayakanth: கேப்டனை பொருத்தவரை அவர் ரொம்பவும் எதார்த்தமான மனிதர். அதனாலயே அவரை தங்க மனசுக்காரர் என்று பலரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அப்படிப்பட்ட கேப்டனையே விஜய் டிவி கொந்தளிக்க வைத்த ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது.

அதாவது விஜயகாந்த் எப்போதுமே கார்ட்டூன் சேனலை தான் அதிகமாக பார்ப்பாராம். அதன் மூலம் அவர் தனக்கு இருக்கும் டென்ஷனை குறைத்துக் கொள்வாராம். அப்படித்தான் ஒரு நாள் அவர் வழக்கம் போல தனக்கு பிடித்த சேனலை வைத்து பார்த்திருக்கிறார்.

Also read: வடிவேலு மனுஷனே கிடையாது,10 வருஷம் பட்டும் திருந்தல.. கூனி குறுக வைத்த விஜயகாந்த்

அப்போது அவருடைய மகன் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்து சேனலை மாற்றி இருக்கிறார். பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்காத கேப்டன் வேறு வழியில்லாமல் அதை பார்த்திருக்கிறார். அங்கு தான் சம்பவமே நடந்து இருக்கிறது.

அதாவது வெற்றி பெற்ற படங்களை கிண்டல் செய்வதுதான் லொள்ளு சபா நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். அந்த வகையில் கேப்டன் நிகழ்ச்சியை பார்க்கும் அந்த நேரத்தில் வானத்தைப்போல படத்தை அவர்கள் கலாய்த்து தள்ளி இருக்கின்றனர். இதனால் கடுப்பான கேப்டன் உடனே இயக்குனரை வரவழைத்து விட்டாராம்.

Also read: தலையாட்டி பொம்மையாய் மாறிய விஜயகாந்த்.. பாலகிருஷ்ணா போல் தமாஷ் ஹீரோவாக மாறிய கேப்டன்

விஜயகாந்த்திடம் இருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிவந்த லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலாவுக்கு சரமாரியாக திட்டுக்கள் விழுந்திருக்கிறது. அதை தொடர்ந்து அவர் வெளிநாட்டில் எல்லாம் இப்படித்தான் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே கடுப்பான கேப்டன் அப்போ வெளிநாட்டில் போய் உன் நிகழ்ச்சியை நடத்து என்று கூறி இருக்கிறார்.

மேலும் இந்த கலாய்க்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம் தொலைச்சுப்புடுவேன் என்று நாக்கை துருத்திக் கொண்டு மிரட்டி இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு லொள்ளு சபா டீம் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கின்றனர். இருந்தாலும் நரசிம்மா படத்தையும் அவர்கள் விட்டு வைக்காமல் கலாய்த்து தள்ளியது தான் ஹைலைட். இப்படி சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்டிருக்கிறது விஜய் டிவி.

Also read: விஜயகாந்த் மிஸ் செய்த 2 படங்கள்.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாத கேப்டன்

Trending News