புதன்கிழமை, ஜனவரி 8, 2025

திறமையாளருக்கான அங்கீகாரத்தை தடுக்கிறதா விஜய் டிவி.? பிக்பாஸ் வீட்டில் வெத்து வேட்டாக இருக்கும் போட்டியாளர்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்து விட்டோம். இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வீட்டில் இப்போது எட்டு போட்டியாளர்கள் உள்ளனர்.

அதில் கடந்த வாரம் ராணவ், மஞ்சரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஏனென்றால் தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் வெத்துவேட்டாக யார் இருக்கிறார் என்று கேட்டால் அது சௌந்தர்யாவாக தான் இருக்கும்.

இவர் வந்த நாளிலிருந்து எந்த டாஸ்க்கிலும் கடும் முயற்சி எடுக்கவில்லை. ஆனாலும் இவருடைய பி ஆர் டீம் இவரை சப்போர்ட் செய்யும் விதமாக பல கண்டன்டுகளை இறக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் வெத்து வேட்டாக இருக்கும் போட்டியாளர்

அதனாலேயே இவர் இத்தனை வாரம் தாக்கு பிடித்திருக்கிறார். அதை தற்போது வெளிப்படுத்தி வரும் ஆடியன்ஸ் விஜய் டிவி திறமையானவர்களை மதிப்பதில்லை.

அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. நிச்சயம் வீட்டுக்குள் இருக்கும் சௌந்தர்யாவை விட எலிமினேட் ஆன மஞ்சரி எவ்வளவோ மேல்.

அவர் பல டாஸ்க்குகளில் கடுமையான முயற்சி எடுத்தார். இருவரையும் ஒப்பிட்டு பார்க்கும்போது மஞ்சரி சிறந்த போட்டியாளர் தான்.

அவரை வெளியேற்றியது நிச்சயம் நியாயம் கிடையாது. இனிமேலும் சௌந்தர்யாவை வீட்டுக்குள் வைத்திருந்தால் அது விஜய் டிவிக்கே எதிர்வினையாக முடியும் என கருத்துக்கள் கிளம்பியுள்ளது.

அதனால் தான் வாரத்தின் முதல் நாளான இன்று சௌந்தர்யாவை டார்கெட் செய்யும் விதமாக பிஆர் டீம் பற்றிய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவருடைய முகத்திரையை மற்ற போட்டியாளர்கள் கிழித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News