திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சம் இல்லாத விஜய் டிவியில், சமையல் நிகழ்ச்சி உடன் காமெடியையும் கலந்து கொடுக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து குக் வித் கோமாளியின் நான்காவது சீசனை கடந்த வாரம் துவங்கியது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனைப் போலவே சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்றனர். வழக்கம்போல் ரக்சன் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிகள் புதிய கோமாளிகள் களம் இறங்கினர்.

Also Read: போட்டியாளர்களாக களம் இறங்க உள்ள திரை பிரபலங்கள்.. விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4

ஏனென்றால் கடந்த சீசனங்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதைக் கவர்ந்த பாலா, சிவாங்கி, புகழ் ஆகியோர் தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருப்பதால் அவர்கள் மூவரும் பங்கேற்காததால் அவர்களுக்கு பதில் புது கோமாளிகள் ஜிபி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் புதிதாக என்ட் கொடுத்த கோமாளி ஒருவர் ஓவராக குடித்துவிட்டு அரங்கத்திலேயே மட்டையானதால் உடனே அவரை நீக்கிவிட்டு, வழக்கம்போல் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு பிரபலத்தை மாற்றி உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: பத்திரிகையாளர்கள் கேட்ட ஒரே கேள்வி.. கதறி கதறி ஒப்பாரி வைத்த தர்ஷா குப்தா

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட ஓட்டேரி சிவா தற்போது நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவருக்கு பதில் கலக்கப்போவது யாரு பிரபலம் தங்கதுரை பங்கேற்கப் போகிறார். மொக்க ஜோக்குகளை சொல்லியே விஜய் டிவியில் பல காலத்தை ஓட்டிய தங்கதுரைக்கு பதில் ஓட்டேரி சிவாக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

ஒரே எபிசோடில் எப்படி அவர் முழு டேலண்டையும் காட்ட முடியும். அதுக்குள்ள எதற்கு இந்த ரீபிளேஸ்மென்ட் என்றும் நெட்டிசன்கள் கோபத்தில் பொங்குகின்றனர். இருப்பினும் ஓட்டேரி சிவா தொடர்ந்து குடிப்பதால் படப்பிடிப்பு தளத்திலும் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுவதால் விஜய் டிவி இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read: ஜிபி முத்துவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி.. வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது சீசன் 4

Trending News