வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சமுத்திரக்கனி படநாயகியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Vijay TV serial actor holding hands with Samuthirakani Movie Actress: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே மக்களிடத்தில் பெரிய அளவில் ரீச் ஆகிவிடும். அதன் மூலம் பேரும் புகழையும் அனைத்து நடிகர்களும் சம்பாதித்து விடுகிறார்கள். பின்பு அதில் நடித்து வரும் ஆர்டிஸ்ட்கள் கொஞ்ச நாளிலே அவர்களுக்கு பிடித்தமான நடிகைகளை திருமணம் செய்துவிட்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

அப்படித்தான் விஜய் டிவி சீரியலில் தற்போது ரொம்பவே டாப்பில் போய்க்கொண்டிருக்கும் “நீ நான் காதல்” என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பிரேம் ஜேக்கப் நேற்று வெள்ளித்திரை நடிகையை கரம் பிடித்து விட்டார்.

நாடகத்தில் சிடுமூஞ்சியாகவும், பெண்களைக் கண்டால் வெறுக்கும் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தாலும், கண்ணில் ஒரு ரொமான்ஸ் மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் காந்த தன்மையும் கொண்ட விஜய ராகவன் தற்போது நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also read: ஆரம்பமாக போகுது குக் வித் கோமாளி சீசன் 5.. வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ!

அந்த நடிகை யார் என்றால் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சாட்டை என்கிற படத்தில் சமுத்திரக்கனிக்கு
மனைவியாக நடித்த ஸ்வாசிகா. அத்துடன் கோரிப்பாளையம், அப்புச்சி கிராமம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே நீண்ட நாட்களாக காதலித்து தற்போது கணவன் மனைவியாக இல்லற வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார்கள்.

இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் பல தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. தற்போது குடும்பத்தின் சம்மதத்துடன் பிரம்மாண்டமான முறையில் நேற்று திருமணம் நடந்து முடித்து விட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

marriage
marriage
vijay tv serial artist
vijay tv serial artist

Also read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

Trending News