Vijay TV: சைபர் கிரைம் மூலம் உங்களை ஏமாற்றலாம் கவனமாக இருங்கள் என செல் போனில் எச்சரிக்கை வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதற்கு என்று சில கும்பல் இருக்கிறது.
அப்படித்தான் தற்போது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மூலம் புகழ்பெற்ற செந்தில் ஏமாற்றப்பட்டுள்ளார். அது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு மக்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
அதாவது அவருக்கு தெரிந்த தொழிலதிபர் ஒருவர் அவசரமாக 15 ஆயிரம் வேணும் என வாட்ஸ் அப் செய்திருக்கிறார். உடனே செந்தில் சரியாக உறுதிப்படுத்திக் கொள்ளாமல் ஜிபே நம்பரை வாங்கி பணம் அனுப்பி இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் நடிகர் வேதனை
அதன் பிறகு தான் வேறு ஒரு நபரின் பெயருக்கு பணம் சென்றதை கவனத்து இருக்கிறார். உடனே சம்பந்தப்பட்ட தொழிலதிபரிடம் போன் செய்து விசாரித்ததற்கு தன்னுடைய whatsapp ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.
மேலும் காலையிலிருந்து நிறைய பேர் இப்படித்தான் போன் செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் செந்தில் ஏமாந்ததை உணர்ந்திருக்கிறார்.
இதுபோல் யாரும் ஏமாற வேண்டாம். யாராவது பணம் கேட்டால் சம்பந்தப்பட்டவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் பணம் அனுப்ப வேண்டாம் என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.