டிஆர்பி இல்லாததால் இழுத்து மூடப்படும் விஜய் டிவி சீரியல்.. பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Vijay Tv:ஆரம்பத்தில் விஜய் டிவி சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தில் இருந்த நிலையில் இப்போது பின்வாங்கியுள்ளது. ஏனென்றால் சன் டிவியில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் சீரியல்கள் அதிகம் இறக்கி உள்ளனர்.

இந்த தொடர்கள் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு இப்போது விஜய் டிவியில் புதிய சீரியல்களை இறக்க உள்ளனர். இதனால் டிஆர்பியே போகாத விஜய் டிவியின் சில தொடர்கள் இப்போது எண்டு கார்டு போட்டு முடிக்க உள்ளனர்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்யலட்சுமி, தமிழும் சரஸ்வதியும் போன்ற சில தொடர்கள் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் தீபக் மற்றும் நட்சத்திர நடித்து வருகின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு போட்ட எண்டு கார்ட்

ஆரம்பத்தில் தமிழும் சரஸ்வதியும் ரசிகர்களின் விருப்பமான தொடராக சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதில் சுவாரஸ்யம் குறைந்துள்ளதால் ரசிகர்கள் இந்த தொடரை பார்ப்பதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.

ஆகையால் இந்த தொடருக்கு பூசணிக்காய் உடைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தமிழும் சரஸ்வதியும் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது.

மேலும் இதற்கு பதிலாக வேறு புதிய சீரியல் ஒன்றை விஜய் டிவி இறக்க உள்ளது. அதற்கான ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அந்த சீரியலாவது சன் டிவியின் டிஆர்பியை முறியடித்து நம்பர் ஒன் இடத்திற்கு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →