வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 300 எபிசோடுகளிலேயே மூட்டை கட்டிய இயக்குனர்

வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள். ஏனென்றால் திங்கள் முதல் சனி வரை வாரத்திற்கு ஆறு நாட்கள் இத்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சிலருக்கு சீரியல் பார்த்தால் தான் தூக்கமே வரும், அந்த அளவுக்கு சீரியல் பிரியர்களாக இருப்பார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்கள் தொடர்ந்து நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது.

Also Read :டிஆர்பியில் அதகளம் செய்த சன் டிவி.. பரிதாபத்திற்குரிய நிலையில் பிரபல சேனல்

தற்போது 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் முடிவுக்கு வருகிறது. அதாவது விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாவம் கணேசன். இத்தொடரில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நவீன் கதாநாயகனாக நடித்த வருகிறார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடர் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பு பெறாத இத்தொடர் டிஆர்பியிலும் ரேட்டிங்கும் பெறவில்லை. இதனால் இந்த தொடருக்கு எண்டு கார்டு போட்டுள்ளார் இயக்குனர். அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.

Also Read :ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் ராஜா ராணி 2.. படங்களை மிஞ்சும் முத்தங்கள் ?

ஆனால் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதால் மதிய நேரத் தொடரை முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. மேலும் இதனால் சில சீரியல்களின் நேரம் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்னும் சில தினங்களில் பாவம் கணேசன் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. பாவம் கணேசன் தொடரின் கிளைமாக்ஸ் காட்சி விரைவில் ஒளிபரப்பாகும். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Also Read :கண்ணம்மா நெத்தி பொட்டில் துப்பாக்கி.. எதிர்பாராத ட்விஸ்ட்

Trending News