வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பிரபல சீரியல் பிரபலம் உயிரிழப்பு

சீரியல்கள் என்றாலே அது சன்டிவி தான் என்ற கதையை கடந்த பத்து ஆண்டுகளில் விஜய் டிவி மாத்தி அமைத்துவிட்டது என்றே சொல்லலாம். கனா காணும் காலங்கள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி தொடர்களின் மூலம் இளைஞர்களை தன் வசப்படுத்திவிட்டது இந்த சேனல். டிஆர்பியில் இன்றுவரை முதலிடத்தில் இருப்பது விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்கள் தான்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌன ராகம், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விஜய் டிவியின் பிரபலமான சீரியலின் முக்கியமான நபர் ஒருவர் திடீரென மரணமடைந்து இருக்கிறார். இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: அடிக்க கை ஓங்கிய ராதிகா.. சிக்கி சீரழிந்த புஷ்பா புருஷன்

விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே சீசன் 2. இதை இயக்கி வந்தவர் தான் இயக்குனர் தாய் செல்வம். சில நாட்கள் வரை உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் நேற்று திடீரென மரணம் அடைந்து விட்டார். இவருடைய மறைவிற்கு விஜய் தொலைக்காட்சி மற்றும், சீரியல் யூனிட்டை சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் தாய் செல்வம் பல வெற்றி தொடர்களை இயக்கியவர். மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களை இயக்கியவர் இவர் தான். செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானிசங்கரை தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக மாற்றிய பெருமை இவரையே சேரும்.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

இவர் நெடுந்தொடர்கள் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் எஸ் ஜெ சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறாததால் மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தினார். மௌன ராகம், பாவம் கணேசன், காத்து கருப்பு போன்ற தொடர்களை இவர் தான் இயக்கினார்.

இப்போது இவர் இயக்கி வந்த ஈரமாகவே ரோஜாவே சீசன் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்போது இவர் திடீரென மரணமடைந்து இருக்கிறார். இவருடைய மறைவிற்கு தினேஷ் கார்த்திக், திரவியம், கேபிரியல்லா, ரவீனா, வைஷாலி மற்றும் சீரியல் பிரபலங்கள் பலரும் இவருடைய மறைவிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்

Trending News