வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

டிஆர்பி ரேட்டிங்கில் ஜெட் வேகத்தில் பறக்கும் விஜய் டிவி சீரியல்.. மகாநதி சிறகடிக்கும் ஆசை சீரியலை ஓரகட்டிய புதுசு

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால் அடுத்தடுத்து புது சீரியல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சில சீரியல்கள் மொக்கையாக இருந்தாலும் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது.

இதில் சிறகடிக்கும் ஆசை சீரியல், பாக்கியலட்சுமி இது இரண்டுமே ஒரு காலத்தில் மக்கள் விரும்பிப் பார்த்தார்கள். தற்போது இந்த சீரியலை மொத்தமாக வெறுக்கும் அளவிற்கு கதை மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இருந்தாலும் பிரேம் டைமில் ஒளிபரப்புவதால் மக்கள் வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

அடுத்ததாக சின்ன மருமகள், ஆஹா கல்யாணம் சீரியலுக்கு பெருசாக மக்களிடம் இருந்து வரவேற்பு இல்லை. ஆனாலும் மகாநதி சீரியல் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்வதால் எல்லோராலும் அந்த நேரத்தில் பார்க்க முடியாததால் மகாநதி சீரியலை பிரேம் டைமிங் மாற்ற சொல்லி மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இருந்த போதிலும் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியலாக மகாநதி சீரியலை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது மகாநதி சீரியல் மற்றும் சிறகடிக்கும் ஆசை சீரியலை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு புதுசாக வந்த அய்யனார் துணை ஜெட் வேகத்தில் ரசிகர்கள் மனதில் குடி புகுந்து விட்டது. அதுவும் அண்ணன் தம்பிகளின் நடிப்பு யதார்த்தமாகவும் இருக்கிறது, சேரன் சோழன் கதாபாத்திரம் மக்களைக் கவர்ந்ததால் தொடர்ந்து அய்யனார் துணை சீரியலுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சோழன் நிலா கல்யாணத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவும் மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை அய்யனார் துணை சீரியல் பெற்றுவிடும். இப்போதைக்கு விஜய் டிவியில் இந்த சீரியல் தான் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருக்கிறது.

Trending News