Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

படுத்துவிட்ட பாக்யாவின் பிஸ்னஸ்.. தூக்கி நிறுத்த பழைய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி

படுத்துவிட்ட பாக்யாவின் பிஸ்னஸ்.. தூக்கி நிறுத்த பழைய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கும் சீரியல்கள் டல்லடிக்கும் போது சீரியலுக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்த இயக்குனர்கள் மெஹா சங்கமத்தை நடத்துவார்கள். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்கள் ஆனா பாண்டியன் […]

சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கும் சீரியல்கள் டல்லடிக்கும் போது சீரியலுக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்த இயக்குனர்கள் மெஹா சங்கமத்தை நடத்துவார்கள்.

அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்கள் ஆனா பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு சீரியல்களும் சங்கமிக்க உள்ளது.

ஏற்கனவே பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தப்பித்த பாக்கியலட்சுமியின் பிசினஸ் படுத்து விட்ட நிலையில், அதனை சரி செய்ய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் முன்னெடுக்கப் போகிறது.

ஏனென்றால் மளிகை கடை வைத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்யாவிடமிருந்து மசாலா பொருட்களை வாங்கி அதை பிரபலப்படுத்தி, பாக்கியலட்சுமியின் பிசினஸை மறுபடியும் துளிர செய்ய போகிறது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பாக்கியலட்சுமி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கட்டுவதற்காக நிலம் வாங்கும் போது ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ததால், அதற்கு நன்றிக்கடனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்கியலட்சுமியின் பிஸினஸுக்கு சப்போர்ட்டாக இருக்க போகிறது.

எனவே இந்த 2 சீரியல்களின் சங்கமும் வரும் வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளதால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கும் எகிற போகிறது. ஆகையால் இந்த இரண்டு சீரியல்களின் சங்கமத்தை கண்டுகளிக்க சின்னத்திரை ரசிகர்கள் இப்பொழுது இருந்தே ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.