Serial TRP Rating List: இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கான விஷயம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான். அதனால் தான் தொடர்ந்து எக்கச்சக்கமான சீரியல்கள் மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் எந்த சீரியல்கள் மக்கள் மனதில் அதிகமாக இடத்தை பிடித்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள் என்னவென்று பார்க்கலாம்.
சிங்க பெண்ணே: ஆனந்தி அன்பு காதல் ஒன்று சேரும் இந்த தருணத்தில் ஆனந்தி கர்ப்பம் என்ற விஷயம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு ஆனந்தி அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். ஆனந்தியின் நிலைமையை புரிந்து கொள்ள முடியாமல் அன்பும் ஒரு பக்கம் புலம்புகிறார். இன்னொரு பக்கம் ஆனந்தி கர்ப்பம் ஆனதற்கு அன்பு தான் காரணம் என்பதை மகேஷ் தவறாக புரிந்து கொண்டு கோபத்துடன் இருக்கிறார். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் 9.34 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: சூர்யாவிடம் இருந்து நந்தினியை பிரிக்க வேண்டும் என்று அர்ச்சனா செய்யும் சதி வேலையில் நந்தினி தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக் கொண்டார். அத்துடன் வீட்டிற்கு வேவு பார்க்க வந்த ரேணுகாவையும் அர்ச்சனாவையும் கண்மூடித்தனமாக நம்பும் நந்தினி , சூர்யா பேச்சை கேட்காமல் இருக்கிறார். இதனால் வருகிற பிரச்சனை எல்லாம் நந்தினி தலையில் விழுகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.09 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: இதுவரை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதிகம் மெனக்கெடு எடுத்து வந்த கயல் முதல் முறையாக எழிலை நல்ல உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று சிவசங்கரிடம் சவால் விட்டிருக்கிறார். அந்த வகையில் இனி எழிலின் முன்னேற்றத்திற்காக கயல் கூடவே இருந்து பொறுப்பான மனைவி என்பதை நிரூபித்துக் காட்டப் போகிறார். இந்த வரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.78 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: சன் டிவி சீரியல் தான் முதல் ஐந்து இடத்தை ஆக்கிரமித்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு ஆட்டம் கொடுக்கும் விதமாக சிறகடிக்கும் ஆசை சீரியல் முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் இந்த வரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.50 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
மருமகள்: ஆதிரை தாலி பெருக்கு பங்க்ஷன் நல்லபடியாக நடக்கக் கூடாது, பிரபுவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வேல்விழி அவருடைய அப்பாவுடன் நடத்தும் யாகத்தால் பிரபு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆனாலும் பிரபு, தன்னுடைய நிலைமையை ஆதிரைக்கு தெரியப்படுத்தாமல் தாலி பெருக்கு பங்க்ஷனுக்கு வந்து ஆதிரையை சந்தோஷப்படுத்தி தாலி கட்டி விடுகிறார். இதுக்கு அடுத்து பிரபுவுக்கு என்ன ஆகும், ஆதிரை பிரபுவை எப்படி காப்பாற்றப் போகிறார் என்பதுதான் விறுவிறுப்பான கதையாக இருக்கும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.92 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.