புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிறகடிக்க ஆசை பிரபலங்களுக்கு விஜய் டிவி வாரிக் கொடுக்கும் ஒரு நாள் சம்பள விவரம்.. மாமியாரை தூக்கி சாப்பிட்ட மருமகள்

Siragadikka Aasai: விஜய் டிவியில் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கேடுகெட்ட மாமியார் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் விஜயா தான். தன்னுடைய மூன்று மருமகள்களையும் ஒரே மாதிரி பார்க்காமல் யாரிடம் பணம் அதிகமாக இருக்குதோ அவர்களிடம் மட்டும் பல்லை இளிச்சுட்டு பேசுவார்.

அதிலும் ஸ்ருதியிடம் கொஞ்சம் பணம் அதிகமாக இருப்பதால், அவருக்கு ஓவராவே ஜால்ரா தட்டுகிறார். அதே சமயம் பூக்கட்டும் குடும்பத்தை சேர்ந்த கதாநாயகி மீனாவை சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மட்டம் தட்டுகிறார். ஆனால் அப்படிப்பட்ட மீனா தான் மாமியாரை தூக்கி சாப்பிடும் அளவுக்கு சம்பளம் வாங்குகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ ஹீரோயின்களாக இருக்கக்கூடிய முத்து, மீனா இருவரும் ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். அவரை தொடர்ந்து முத்துவின் அப்பா அண்ணாமலை ஒரு நாளைக்கு ரூ. 8000, முத்துவின் அம்மா விஜயா ஒரு நாள் சம்பளமாக ரூ. 8000 வாங்குகிறார்.

Also Read: விஜய் டிவியின் அராத்து நடிகையை தட்டி தூக்கிய ஜீ தமிழ்.. இப்படியா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது

மாமியாரை விட அதிக சம்பளம் வாங்கும் மருமகள்

மேலும் ரோகிணி, மனோஜ் கேரக்டரில் நடிப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ. 6000 சம்பளம் வாங்குகின்றனர். மேலும் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ஒரு நாளைக்கு ரூ. 5000 சம்பளம் வாங்குகின்றனர். மேலும் மீனாவின் தம்பி சத்யா, ஒரு நாளைக்கு ரூ 3000மும், சீதாவும் ஒரு நாளைக்கு ரூ 3000 வாங்குகிறார்.

எனவே சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் சம்பளத்தை வைத்து பார்க்கும் போது மீனா அவருடைய மாமியாரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read: குடும்பத்திடம் கையும் களவுமாய் மாட்டிட்டியே பங்கு(கோபி).. பாக்யா மூலம் திருப்பி அடிக்க போகும் கர்மா

Trending News