திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ஆரம்பிக்கப் போகும் பகடைக்காய் ஆட்டம்.. சூப்பர் ஹிட் சீரியலின் 2-ம் பாகம்!

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னிலையில் டி ஆர் பி-யில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க உள்ளது.

நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பம், இந்த காலத்திலும் சாத்தியம் என்பதை வெளிக்காட்டும் விதத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்  ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

இருப்பினும் இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் திருமணமானது பல தடைகளை மீறி முடிந்த நிலையில், சின்ன மளிகை கடையிலிருந்து பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரை கதைக்களத்தை விறுவிறுப்பாக காட்டி முடித்துவிட்டனர்.

இனி என்ன காட்ட உள்ளது என்பதற்காகவே இந்த சீரியலின் கதையை வேறு ஒரு கோணத்தில் காண்பிக்க சீரியலின் இயக்குனர் முடிவெடுத்துவிட்டார். ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தில் முல்லை-கதிர் இருவரையும் முக்கிய கதாபாத்திரங்களாக வைத்திருக்கின்றனர்.

இதில் கதிர் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது தோன்றும், முல்லை கதிரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறுகிறாள். இவ்வாறு முல்லை-கதிர் இருவரையும் பிரித்து பகடைக்காய் ஆட்டத்தை இரண்டாவது சீசனில் காட்டுப் போவதால் சீரியல் கூடுதல் வெறுப்புடன் காட்டப்பட உள்ளது.

இவ்வாறு முல்லையை ஒதிக்கி கதிர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது எதனால் என்பதை அறிந்துக்கொள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தை சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Trending News